6th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பி.05) ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில், வாகன உதிரிப் பொருட்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான கெஸ்டாம்ப் நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு மற்றும் தொழிற்கல்விக்கான கருவிகளை உற்பத்தி செய்யும் எடிபன் நிறுவனம், ரயில் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான டால்கோ நிறுவனம், உயர்தொழில்நுட்ப உயிரியல் பொருள்களின் ஆராய்ச்சியையும் உற்பத்தியையும் மேற்கொள்ளும் மேப்ட்ரீ நிறுவனம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த உயர் நிர்வாகிகளைச் சந்தித்து, வளமான வாயுப்புகள் உள்ள தமிழ்நாட்டில் நிலவும் தொழில் முதலீட்டுக்கான சூழல்களை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
- இச்சந்திப்பின் பலனாக எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
- இச்சந்திப்பின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, 'Guidance' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, முதலமைச்சரின் செயலாளர் பு. உமாநாத் ஆகியோர் உடனிருந்தனர்.'
- வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்டத்தில் ரூ.1330 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கோவாவில் இன்று தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் கல்வி, விளையாட்டு, நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுலாத் துறைகளில் உள்கட்டமைப்புக்கு ஊக்கமளிப்பது போன்றவை அடங்கும்.
- வேலைவாய்ப்புத் திருவிழாத் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1930 அரசு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களையும் வழங்கினார்.
- கோவாவில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
- கடல் நீருக்கடியில் சிக்கும் போது தப்பிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் இந்தப் பயிற்சி மையம் குறித்த செயல்விளக்கங்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்.
- இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கோவாவில் தொடங்கி வைத்தார். இந்தியா எரிசக்தி வாரம் 2024 இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரே எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடு ஆகும்.
- இது இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகளை ஊக்குவிப்பதற்காக முழு எரிசக்தி மதிப்பு சங்கிலியையும் ஒன்றிணைக்கிறது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் வட்டமேஜை மாநாட்டில் ஆலோசனை மேற்கொண்டார்.
- ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து ஜனவரி 30 முதல் பிப்ரவரி 02, வரை, வானில் உள்ள இலக்குகளை அழிக்கவல்ல அதிவேக 'அபியாஸ்' ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டது.
- பூஸ்டரை பாதுகாப்பாக விடுவித்தல், ஏவுகணையை செலுத்துதல், திட்டமிட்ட ஏவுகணை வேகத்தை அடைதல் போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.
- இந்த ஏவுகணை ஏடிஇ நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆட்டோ பைலட்டின் உதவியுடன் தானியங்கி பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 'ஒரே நாடு, ஒரே பொருள், ஒரே ஒழுங்குமுறை' என்ற கருத்தாக்கத்தின் மூலம் எளிதாக வர்த்தகம் செய்வதை எளிமையாக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் புதுதில்லியில் மத்திய சுகாதார செயலாளர் திரு அபூர்வா சந்திரா தலைமையில் நடைபெற்ற அதன் 43-வது கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான பல்வேறு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- உணவுப் பொருட்களுக்கான இந்திய தர நிர்ணய அமைவனம் அல்லது அக்மார்க் சான்றிதழை ரத்து செய்வதற்கான பல்வேறு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஒழுங்குமுறைகளில் பல்வேறு திருத்தங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- திருத்தங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, உணவு வணிகங்கள் கட்டாய சான்றிதழுக்காக பல்வேறு அதிகாரிகளை அணுக வேண்டியதில்லை. உணவுப் பொருட்களுக்கு சான்றிதழ் மட்டுமே கட்டாயமாக்கப்படும்.
- மீட் (ஹனி ஒயின்), ஆல்கஹால் ரெடி-டு-டிரிங்க், பானங்களின் தரநிலைகள், பால் கொழுப்பு பொருட்களின் தரங்களை திருத்துதல், ஹலீம் போன்றவற்றிற்கான தரநிலைகள் ஆகியவை பிற ஒப்புதல்களில் அடங்கும்.
- ஒப்புதலை இறுதி செய்வதற்கு முன் பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்க வரைவு அறிவிக்கைக்கான கூட்டத்தில் பல்வேறு உணவு பாதுகாப்பு மற்றும் தர ஒழுங்குமுறைகளில் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
- இந்த விதிமுறைகள் பால் கொழுப்பு தயாரிப்புகளின் தரங்களை திருத்துவதை உள்ளடக்கியது. உணவு ஆணையம் இறைச்சி பொருட்களுக்கான தரங்களின் ஒரு பகுதியாக 'ஹலீம்' தரங்களை அமைக்கப் போகிறது.
- ஹலீம் என்பது இறைச்சி, பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் பிற பொருட்களால் தயாரிக்கப்படும் ஒரு உணவாகும், இது தற்போது எந்த தரத்தையும் கொண்டிருக்கவில்லை.