தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.சிவனருள், ஆர். சரவணகுமார், மருத்துவர் ஏ.தவமணி, உஷா சுகுமார், ஆர். பிரேம்குமார் உள்ளிட்ட 5 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு டிஎஸ்பிஎஸ்சி உறுப்பினர் பொறுப்பில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.