Type Here to Get Search Results !

27th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


27th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கருணாநிதி நினைவிடம், அருங்காட்சியகம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
  • மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாய் செலவில், உலகத் தரத்தில் நினைவிடம், அதன் வளாகத்தில், 15 அடி ஆழத்தில் பூமிக்கடியில் பிரமாண்ட அருங்காட்சியகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
  • அதன் அருகில் இருக்கும் அண்ணாதுரை நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம், நுழைவு வளைவு ஆகியவையும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
  • இவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அழைப்பிதழ் கூட அச்சடிக்காமல், எளிமையான முறையில் இந்நிகழ்ச்சியை, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஏற்பாடு செய்திருந்தார்.
ரூ.10,417 கோடி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 8 ஆயிரத்து 801 கோடியே 93 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளையும், ஆயிரத்து 615 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
  • அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 7 ஆயிரத்து 300 கோடிக்கு மேல் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்களில் மேம்பாட்டுத் திட்டங்களை திறந்து வைத்தார்.
  • அத்துடன், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் 111 கோடியே 35 லட்சம் மதிப்பில் பாசன கட்டமைப்புகள் மற்றும் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் 414 கோடியில் நீரொழுங்கி திறக்கப்பட உள்ளது.
  • சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்ட்ரல் அருகே ஈவினிங் பஜார் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு குறுக்கே 9 கோடியே 75 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது சுரங்க நடைப்பாதை உட்பட பல்வேறு இடங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
  • மேலும், நீர்வளத்துறை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
ரூ.1,800 கோடியிலான விண்வெளித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்
  • கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய 3 மாநிலங்களில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, பல்வேறு நலத்திட்ட தொடக்க நிகழ்ச்சிகளிலும், கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்கிறாா்.
  • இதையொட்டி, தில்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று(பிப்.27) காலை 10 மணியளவில் வந்தடைந்தார்.
  • திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்குச் சென்ற பிரதமா் மோடி, ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஆய்வு செய்தார்.
  • அங்கு சுமாா் ரூ.1,800 கோடி மதிப்பிலான, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் 'பி.எஸ்.எல்.வி. ஒருங்கிணைப்பு வசதி', மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின் மற்றும் நிலைப் பரிசோதனை வசதி', மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 'ட்ரைசோனிக் காற்றுச் சுரங்கம்' ஆகிய 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் 4 வீரர்கள் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்
  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு (பிப்.27) வருகை தந்த பிரதமர் மோடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி (PIF) உள்ளிட்ட விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 
  • அப்போது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
  • அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர். 
  • இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இன்றைய விழாவில் இந்த நால்வருக்கும் மிஷன் லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel