Type Here to Get Search Results !

வறுமை குறித்து எஸ்பிஐ நடத்திய ஆய்வு 2022 - 2023 / SBI STUDY ON POVERTY 2022 - 2023

  • வறுமை குறித்து எஸ்பிஐ நடத்திய ஆய்வு 2022 - 2023 / SBI STUDY ON POVERTY 2022 - 2023: எஸ்பிஐ நடத்திய ஆய்வின்படி, கிராமப்புறங்களில் தனிமனித செலவினம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது. 
  • அதாவது, ஏழைகளில் ஜாதி, மத, வருமான வித்தியாசம் இல்லாமல் செலவினம் செய்வது அதிகரித்து வந்துள்ளது. தனி குடும்ப செலவினமும் அதிகரித்துள்ளது.
  • 2018-19ஆம் ஆண்டில் இருந்து கிராமப்புறங்களில் வறுமை சுமார் 4% குறைந்து வந்துள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் கொரோனா பாதிப்புக்குப் பின்னர் 1.70% குறைந்து வந்துள்ளது. 
  • எஸ்பிஐ ஆய்வின்படி கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவுக்கான (MPCE) இடைவெளி தற்போது 71.2% ஆக உள்ளது. இதுவே, 2009-10ல் 88.2% ஆக இருந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • கிராமப்புறங்களில் அரசு எடுத்து இருக்கும் நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வாங்கும் திறனும், செலவிடும் திறனும் அதிகரித்து இருக்கிறது.
  • குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் கிராமங்களில் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
  • மேலும், கிராமங்களில் நுகர்வு ரீதியான சமத்துவம் சமூக மக்களிடையே எந்தவித வேறுபாடும் இல்லாமல் அதிகரித்து வந்துள்ளது. இது கிராமங்களில் 0.365 லிருந்து 0.343 ஆக குறைந்துள்ளது.
  • இதேபோன்று கிராமப்புற மற்றும் நகர்ப்புற நுகர்வு ஒரே அளவில் அதிகரித்து வருகிறது. கிராமப்புறத்தில் இது 2.66% ஆகவும், நகர்ப்புறங்களில் இது 2.59% ஆகவும் இருக்கிறது. கிராமப்புற, நகர்ப்புற நுகர்வு இடைவெளி சதவீத அடிப்படையில் குறைந்து வருகிறது.
  • குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற தனிநபர் நுகர்வு இடைவெளி குறைவாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த இடைவெளி 43%ஆக இருக்கிறது. 
  • இதுவே, சத்தீஸ்கர், அசாம், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது.

ENGLISH

  • SBI STUDY ON POVERTY 2022 - 2023: According to a study conducted by SBI, per capita expenditure has increased in rural areas. This will help the country's GDP, the survey said. That is, spending has increased among the poor irrespective of caste, religion and income. Individual household expenditure has also increased.
  • Rural poverty has declined by around 4% since 2018-19. This is a decrease of 1.70% in urban areas after Corona. The rural-urban monthly per capita consumption expenditure (MPCE) gap currently stands at 71.2%, according to an SBI study. 
  • This was 88.2% in 2009-10. The reason for this is also mentioned. Due to the measures taken by the government in rural areas, the purchasing power and spending power of the people is increasing.
  • The study revealed that the growth rate has increased especially in the villages of Uttar Pradesh, Bihar and Madhya Pradesh. Also, consumption equality in villages has increased without any distinction between social groups. It decreased from 0.365 to 0.343 in villages.
  • Similarly, rural and urban consumption are increasing at the same rate. In rural areas it is 2.66% and in urban areas it is 2.59%. The rural-urban consumption gap is decreasing in percentage terms.
  • The gap between rural and urban per capita consumption is particularly low in states like Tamil Nadu, Kerala and Punjab. In Tamilnadu this gap is 43%. This is more in Chhattisgarh, Assam, Gujarat, Haryana, Jharkhand, Odisha and Maharashtra.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel