Type Here to Get Search Results !

26th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

புதுதில்லியில் பாரத் டெக்ஸ் 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
  • புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024-ஐ தொடங்கி வைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். பாரத் டெக்ஸ் 2024 பிப்ரவரி 26-29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 11 ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு அரசால் ஆதரிக்கப்படும், பாரத் டெக்ஸ் 2024 வர்த்தகம், முதலீடு என்ற இரட்டை தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. 
  • இது நீடித்த தன்மையில் அதிக கவனம் செலுத்துகிறது. நான்கு நாள் நிகழ்வில் 65-க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெற்றுள்ளன
சுமார் ரூ.41,000 கோடி மதிப்பிலான 2000-க்கும் மேற்பட்ட ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • ரூ.41,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சுமார் 2,000 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • 500 ரயில் நிலையங்கள், 1500 பிற இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ரயில்வே நிகழ்வுடன் இணைந்தனர்.
  • 1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள இந்த சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.21,520 கோடியாகும். 
  • இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், பாதுகாப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்தும், ரயில் பயணத்தின் திறனை மேம்படுத்தும்.
பாலஸ்தீன பிரதமர் ராஜிநாமா
  • இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புகள் வாழும் மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீன பகுதிகளை பாலஸ்தீன நிர்வாகம் என்றழைக்கப்படும் பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தது.
  • இந்நிலையில், பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முஹம்மது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அவர் இன்று(பிப்.26) சமர்ப்பித்துள்ளார்.
  • காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காஸாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
  • ஒருங்கிணைந்த பாலஸ்தீன நிர்வாகத்தின் பிரதமராக முஹம்மது ஷ்டய்யே கடந்த 2019-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில், அமெரிக்காவின் கடும் அழுத்தம் காரணமாகவே பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே இந்த முடிவை எடுத்திருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
  • முஹம்மது ஷ்டய்யே தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகியிருப்பதன் மூலம், பாலஸ்தீனத்தில் அமெரிக்க ஆதரவுடன் புதிய அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel