24th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, அவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
- 11 மாநிலங்களில் உள்ள 11 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) மேற்கொள்ளப்படும் 'கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்' முன்னோடித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இந்த திட்டத்தின் கீழ் கிடங்குகள் மற்றும் இதர வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக நாடு முழுவதும் கூடுதலாக 500 பிஏசிஎஸ் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- இந்த திட்டம் பிஏசிஎஸ் கிடங்குகளை உணவு தானிய விநியோகச் சங்கிலியுடன் தடையின்றி ஒருங்கிணைப்பதையும், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், நபார்டின் ஆதரவுடனும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (என்.சி.டி.சி) கூட்டு முயற்சியுடனும் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
- வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு போன்ற தற்போதுள்ள பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது.
- இதில் பங்கேற்கும் பிஏசிஎஸ் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்வதற்கான மானியங்கள் மற்றும் வட்டி மானிய நன்மைகளைப் பெற உதவுகிறது.
- கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளித்தல் மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட "கூட்டுறவு மூலம் செழிப்பு" என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள 18,000 பிஏசிஎஸ்-ஐ கணினிமயமாக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- "வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர்" நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ரூ .34,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான சாலைகள், ரயில்வே, நிலக்கரி, மின்சாரம் மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்.
- என்டிபிசி-யின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம், அலகு-1ஐ (2x800 மெகாவாட்) நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் என்டிபிசியின் லாரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் alagu-2க்கு (2x800 மெகாவாட்) அடிக்கல் நாட்டினார்.
- தென்மேற்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் ரூ.600 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட மூன்று முக்கிய இணைப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.