கவிக்கோ விருது 2022 / KAVIKO AWARD 2022: கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளையின் மூலம் ஆண்டுதோறும் 'கவிக்கோ விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2022 -ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிஞருக்கான விருது கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
அந்தவகையில் 2022 -ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிஞருக்கான விருது கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. 1 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் கூடிய கவிக்கோ விருதை ஜெயந்தா அவர்களுக்கு வி.ஐ.டி வேந்தர் கோ. விசுவநாதன் அவர்கள் வழங்க இருக்கிறார். இந்த விருது விழா மார்ச் 6 ஆம் தேதி வேலூரில் உள்ள சத்துவாச்சாரி சோலை அரங்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் பெரும்புலவர் வே. பதுமனார், கவிக்கோ அறக்கட்டளையின் துணைத்தலைவர் தி.மு. அப்துல் காதர், செயலாளர் அ. அயாஸ் பாஷா, பொருளாளர் வெ. சோலைநாதன், உறுப்பினர்கள் எஸ்.எஸ். ஷாஜஹான், டாக்டர் அ. அஜீம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
மேலும் பேராசிரியர் முனைவர் கு. வணங்காமுடி, சொற்கோ மு. சுகுமார், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் கி. பார்த்திப ராசா, பேராசிரியர் கவிஞர் அன்பு, மற்றும் அ. முகம்மது அஷ்ஃரப் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
ENGLISH
KAVIKO AWARD 2022: The 'Kavikko Award' is presented annually by the Kavikko Abdul Rahman Foundation. In that way, the award for the best poet of the year 2022 will be given to the poet Nellai Jayantha.
In that way, the award for the best poet of the year 2022 will be given to the poet Nellai Jayantha. Jayantha was presented with the Kaviko Award with a prize money of Rs 1 lakh by VIT Vendor Co. Viswanathan is here to present. The award ceremony is scheduled to be held on March 6 at the Sathuvachari Solai Arena in Vellore.
Most of the people in this event. Padumanar, Deputy Chairman of Kaviko Trust DM. Abdul Qader, Secretary A. Ayaz Pasha, Treasurer V. Cholainathan, Members S.S. Shah Jahan, Dr. Azim also participates.
Also Professor Dr. Vanangamudi, Sotko M. Sukumar, Head of Tamil Department, Tirupattur Pure Heart College. Parthiba Raza, Prof. Kavinjar Anbu, and A. Mohammad Ashraf is also participating and performing.