Type Here to Get Search Results !

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 / TAMILNADU STATE WOMEN POLICY 2024

  • தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 / TAMILNADU STATE WOMEN POLICY 2024: தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட 'தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024' - யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • அதில், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல் ஆகியவை மகளிர் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
  • வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல், அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல் உள்ளிட்டவைகளும் மகளிர் கொள்கையில் உள்ளன.
  • மேலும், மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல், மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல் ஆகியவையும் உள்ளன. 
  • இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அச்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும்.
  • இதன் பொருட்டு, பாலின வேறுபாட்டினை களைந்திடவும், பெண்களுக்கேற்ற பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திடவும், பெண்களின் நிலையினை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை தீட்டி, அவற்றை சீரிய முறையில் செயல்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழச் செய்துள்ளது.
  • தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் இம்மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இக்கொள்கையானது, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். மேலும், ஐந்தாண்டுகளுக்கு பிறகு மறுஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

மாநில மகளிர் கொள்கையின் முக்கிய சிறப்பம்சங்கள், குறிக்கோள்கள்

  • தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 / TAMILNADU STATE WOMEN POLICY 2024: பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல் மற்றும் பெண் குழந்தைகளின் இடை நிற்றல் விகிதத்தை குறைத்தல்.
  • வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
  • வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.
  • அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல்.
  • பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.
  • பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல்.
  • தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல்.
  • நிறுவனக் கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.
  • மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல், செயல்படுத்துதல்

ENGLISH

  • TAMILNADU STATE WOMEN POLICY 2024: Chief Minister M. K. Stalin released the 'Tamil Nadu State Women's Policy 2024' prepared by the Department of Social Welfare and Women's Rights to improve the welfare of women in Tamil Nadu.
  • Among them, the women's policy includes reducing the dropout rate of girls, improving the health and nutritional status of adolescent girls and women.
  • The women's policy also includes increasing women's participation in employment, ensuring safe and conducive workplaces for women workers in all organized and non-organized occupations, supporting new business ventures, promoting digital literacy and reducing the digital gender gap.
  • Also, reducing the skill gap among women, facilitating more access to bank loans for women, and encouraging women to participate in the political arena. In a statement issued by the government in this regard, the overall development of the community can be assessed with the development of women in the society.
  • For this purpose, to eliminate gender discrimination, to create a safe environment for women and to improve the status of women, the Government of Tamil Nadu has planned various welfare programs and implemented them in a systematic manner, making Tamil Nadu the premier state.
  • Based on the vision, the State Women's Policy has been formulated on the basis of social justice, equality and empowerment of women. This policy will remain in force for 10 years or until the next new policy is formulated. Also, provision has been made for review after five years.

Key Features, Objectives of State Women Policy

  • TAMILNADU STATE WOMEN POLICY 2024: Establish gender sensitive education system and reduce dropout rate of girls.
  • Improving the health and nutritional status of adolescent girls and women.
  • Increasing participation of women in employment.
  • Ensuring safe and conducive workplaces for women workers in all organized and non-organized occupations.
  • Supporting women-run small businesses and new business ventures.
  • Bridging the digital gender gap by promoting digital literacy for women to access higher paying jobs.
  • Bridging the skills gap among women by providing training and skill development in the industry sector.
  • Access to corporate credit facilities and facilitate greater access to bank loans to women in need.
  • Encouraging and enabling women to participate in the political arena

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel