19th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
- உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ கல்கி கோயிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார்.
- ஸ்ரீ கல்கி கோயில் நிறுவன அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி கோயில் கட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
- மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்புடன் (ஓஎன்டிசி) மீன்வளத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- அப்போது மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, உள்நாட்டு மீன்வள இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, ஓஎன்டிசி திரு கோஷி மற்றும் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
- "மீன்பிடிப்பது முதல் வர்த்தகம் வரை, டிஜிட்டல் உருமாற்றத்தின் மூலம் சந்தை அணுகலை அதிகரித்தல்" என்ற கையேட்டையும் மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார்.
- பாரம்பரிய மீனவர்கள், மீன் பண்ணை உற்பத்தியாளர் அமைப்புகள், மீன்வளத் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து பங்கெடுப்பாளர்கள் மின்னணு சந்தை மூலம் தங்கள் தயாரிப்புகளை வாங்கவும், விற்கவும் ஒரு டிஜிட்டல் தளத்தை வழங்குவதும், மீன்வளத் துறையை ஓஎன்டிசி-யுடன் ஒருங்கிணைப்பதன் நோக்கமாகும்.
- மீனவர்கள், மீன் வளர்ப்போர், உழவர் அமைப்பினர், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர மீனவர் கூட்டுறவு அமைப்புகளை ஒருங்கிணைத்து மின்னணு சந்தைப்படுத்துதலில் முக்கிய பங்கு வகிக்கும் தனித்துவமான மின்னணு சந்தைப்படுத்துதலை ஓஎன்டிசி மேற்கொள்ளும்.