Type Here to Get Search Results !

16th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


16th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஹரியானா மாநிலம் ரேவாரியில் ரூ.9,750 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
  • ஹரியானா மாநிலம் ரேவாரியில் இன்று ரூ.9750 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நிறைவேறிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். 
  • நகர்ப்புறப் போக்குவரத்து, சுகாதாரம், ரயில் மற்றும் சுற்றுலா தொடர்பான பல முக்கியத் துறைகளை இந்தத் திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த நிகழ்ச்சியையொட்டி கண்காட்சிகளையும் திரு மோடி பார்வையிட்டார்.
  • சுமார் ரூ.5,450 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள குருகிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 
  • ஹரியானா மாநிலம் ரேவாரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) அடிக்கல் நாட்டப்படுகிறது. சுமார் 1,650 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் ரேவாரியில் உள்ள மஜ்ரா முஸ்தில் பால்கி கிராமத்தில் 203 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்படும்.
  • குருஷேத்ராவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அனுபவ கேந்திரா ஜோதிசாரத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகம் சுமார் ரூ.240 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் 17 ஏக்கர் பரப்பளவில் 100,000 சதுர அடி உட்புற பரப்பளவு கொண்டது.
டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை
  • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
  • தற்போது மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
ரூ.84,560 கோடி ராணுவபொருள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
  • பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சிலின் (டிஏசி) கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் பிப்ரவரி 16 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராணுவம் மற்றும் இந்திய கடலோரக் காவல்படையின் திறன்களை உயர்த்துவதற்காக ரூ.84,560 கோடி மதிப்பிலான மூலதன கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின் போது, பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.94 லட்சம் கோடியை விட 4.72 சதவீதம் அதிகமாகும். 
  • பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த ஒட்டுமொத்த பட்ஜெட்டில் இந்தத் தொகை சுமார் 13 சதவீதமாகும். அனைத்து அமைச்சகங்களை விட பாதுகாப்பு அமைச்சகம் மிகப்பெரிய தொகையைப் பெற்றது.
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவது இந்த கவுன்சிலின் பொறுப்பாகும்.
ரிசர்வ் வங்கி - நேபாள ராஸ்ட்ரா வங்கி இடையே UPI-NPI இணைப்புக்கு ஒப்பந்தம்
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நேபாள ராஸ்ட்ரா வங்கி (NRB) இணைந்து, UPI-NPI இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒருங்கிணைப்பானது இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • இரு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு இடையேயான இணைப்புக்கான ஒப்பந்தம் தொடர்பான முழுமையான விதிமுறைகள் தொடர்பில் கையெழுத்தான பிறகு, UPI மற்றும் NPI-ன் இணைப்புக்கு தேவையான அமைப்புகள் அமைக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel