Type Here to Get Search Results !

14th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


14th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானங்கள் - சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. மூன்றாவது நாளாக இன்று நடைபெறும் அமர்வில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற இரண்டு தனித் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.
  • பின்னர் 'ஒரே நாடு ஒரே தேர்தல்', தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த இரண்டு அரசினர் தனித் தீர்மானங்கள் மீது சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
  • இதையடுத்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில், ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
வீடுகளில் சூரிய மின்சக்தி தயாரிக்கும் குடும்பங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் - பிரதமரின் திட்டம் தொடக்கம்
  • வீட்டு மாடிகளில் சூரிய மின்தகடுகளைப் பொருத்தியுள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை’ பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
  • நாட்டின் ஒரு கோடி வீடுகளின் மாடிகளில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்தி 40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பிரதமரின் சூரியோதய திட்டத்தை அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை நாளான கடந்த மாதம் 22-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா்.
  • இத்திட்டத்தில் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மானிமும் வழங்கவுள்ளது. அதேபோல், குடும்பங்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் ‘பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை’ பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
  • நிலையான வளா்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை தொடங்குகிறோம். ரூ.75,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் மாதந்தோறும் ஒரு கோடி குடும்பங்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
  • வீடுகளிள் சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பை நிறுவியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் மானியங்கள் முதல் அதிக வரிச் சலுகை கடன்கள்வரை மக்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே 8 ஒப்பந்தங்கள் - பிரதமா் மோடி-அதிபா் முகமது முன்னிலையில் கையொப்பம்
  • ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்ற பிரதமா் நரேந்திர மோடி, இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
  • அப்போது, இரு நாடுகள் இடையே பரஸ்பர முதலீட்டுக்கான ஒப்பந்தம் உள்பட 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்றடைந்த பிரதமா் மோடியை விமான நிலையத்தில் அதிபா் முகமது பின் சையத் நேரில் வரவேற்றாா். 
  • அப்போது, இரு தலைவா்களும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா். பிரதமா் மோடிக்கு அரசு சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 
  • பின்னா், இரு தலைவா்களும் தனிப்பட்ட முறையிலும், பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வியூக ரீதியில் பரஸ்பர கூட்டுறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 
  • பிரதமா் மோடி மற்றும் அதிபா் முகமது பின் சையத் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 
  • முக்கியத்துவம் வாய்ந்த பரஸ்பர முதலீட்டுக்கான ஒப்பந்தம், விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தம், எண்ம உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், இருநாடுகளின் தேசிய ஆவண காப்பகங்கள் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், இந்தியாவின் இணையவழி பரிவா்த்தனை தளமான யுபிஐ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரிவா்த்தனை தளமான ஏஏஎன்ஐ ஆகியவற்றின் இணைப்புக்கான ஒப்பந்தம், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'ரூபே' கடன்-பற்று அட்டைகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 'ஜேவான்' அட்டைகள் இடையிலான இணைப்புக்கான ஒப்பந்தம் உள்ளிட்டவை கையொப்பமாகின. 
  • ரூபே-ஜேவான் இணைப்பானது, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ரூபே அட்டை சேவைகளின் ஏற்பை உறுதி செய்கிறது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்துடன் பரஸ்பர முதலீடு மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை இம்மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.
உலக அரசுகள் உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் பங்கேற்றார்
  • ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி  2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். 
  • எதிர்கால அரசுகளை வடிவமைத்தல்" என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் அவர் சிறப்புரையாற்றினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்றார். 
  • இந்த முறை நடைபெற்ற உச்சி மாநாட்டில் 10 நாடுகளின் அதிபர்கள், 10  நாடுகளின் பிரதமர்கள் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
2024 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்கள் 
  • நாட்டின் மொத்த விலைக் குறியீட்டெண்ணின் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்க விகிதம் 2024 ஜனவரி மாதத்தில் (2023 ஜனவரிக்கு மேல்) 0.27%-ஆக இருந்தது. 
  • 2024 ஜனவரியில் நேர்மறையான பணவீக்க விகிதத்திற்கு உணவுப் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், பிற உற்பத்தி, கனிமங்கள், பிற போக்குவரத்து உபகரணங்கள் போன்றவற்றின் விலை அதிகரிப்பே முதன்மையான காரணமாகும்.
  • முதன்மையான பொருட்கள் (22.62%) பெரிய குழுமத்திற்கான குறியீடு 2023 டிசம்பர், மாதத்தில் 182.9 (தற்காலிகமானது) ஆக இருந்த நிலையில் 2024 ஜனவரியில் 1.04% குறைந்து 181.0 (தற்காலிகமானது) ஆக இருந்தது. 
  • கனிமங்களின் விலை (0.93%) 2023 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2024 ஜனவரியில் அதிகரித்துள்ளது. கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (-0.33%), உணவு அல்லாத பொருட்கள் (-0.49%) மற்றும் உணவுப் பொருட்கள் (-1.36%) ஆகியவற்றின் விலைகள் 2023 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2024 ஜனவரியில் குறைந்துள்ளன.
  • எரிபொருள் மற்றும் மின்சாரம் (எடை 13.15%) முக்கிய குழுமத்திற்கான குறியீடு 2023 டிசம்பர் மாதத்தில் 154.2 (தற்காலிகமானது) இருந்தது. 2024 ஜனவரியில் 0.39% அதிகரித்து 154.8 (தற்காலிகமானது) ஆக அதிகரித்தது. 
  • 2023 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரியில் மின்சாரத்தின் விலை (3.30%) அதிகரித்துள்ளது. நிலக்கரி (-0.37%) மற்றும் கனிம எண்ணெய்களின் (-0.56%) விலைகள் 2023 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2024 ஜனவரியில் குறைந்துள்ளன.
கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு 463 நிலைப்படுத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ஏவெய்ல் நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம்
  • இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 12.7 மி மீ நிலைப்படுத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகளை (எஸ்ஆர்சிஜி- SRCG) மொத்தம் ரூ.1752.13 கோடி செலவில் தயாரித்து வழங்குவதற்காக கான்பூரின் ஏவெய்ல் (AWEIL) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் இன்று (பிப்ரவரி 14, 2024) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • சமச்சீரற்ற சூழல் உள்ள நிலையில் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சிறிய இலக்குகளை துல்லியமாக எதிர்கொள்ள இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் திறனை எஸ்ஆர்சிஜி மேம்படுத்தும்.
  • இந்தக் கொள்முதல் "பாதுகாப்புத் துறையில் தற்சார்பு" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு மேலும் ஊக்கமளிக்கும். இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளில் 125-க்கும் மேற்பட்ட இந்திய விற்பனையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு உற்பத்தியில் ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel