Type Here to Get Search Results !

சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் | SIMILIPAL BIOSPHERE RESERVE

  • சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் | SIMILIPAL BIOSPHERE RESERVE: ஒரிஸாவின் வடபுறத்தில் 4374 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் 1994ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 
  • கிழக்கு பீடபூமி, சோட்டா நாக்பூர் பீடபூமி, கீழ்கங்கை சமவெளி மற்றும் கடற்கரையோர பகுதிகளைக்கொண்ட இக்காப்பகம் பல ஜீவ நதிகளுக்கு ஆதாரமாக விளங்கும் மிகப்பெரிய நீர்வடிப் பகுதியாகும். 
  • வெப்ப மண்டல பகுதி, பசுமைமாறா காடுகள், வெப்ப மண்டல ஈரமான இலையுதிர்க்காடுகள் மற்றும் சவன்னா பகுதிகள் என பல காடுவகைகளை உள்ளடக்கி, பல்லுயிர் வளம் நிறைந்து காணப்படுகிறது. 
  • இந்தியாவில் காணப்படும் தாவரயினங்களில் பூக்கும் தாவரங்கள் 7%, ஆர்கிட்கள் 8%, ஊர்வன 7%, பறவையினங்கள் 20% மற்றும் பாலூட்டிகள் 11% இங்குள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தாவரங்கள்

  • சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் | SIMILIPAL BIOSPHERE RESERVE: இக்காப்பகத்தில் 94 வகை ஆர்கிட்கள் (இருவகை இவ்விடத்திற்கே உரித்தானது), 8 வகை அழியூம் தருவாயில் இருப்பவை, 8 வகை அழிந்து கொண்டிருப்பவை, மற்றும் 34 வகை அரியவை என சுமார் 1170 பூக்கும் தாவர இனங்கள் இங்கு காணப்படுகின்றன. 
  • நீர் மருது, சிசு, செண்பகம், சால் மற்றும் இலுப்பை போன்ற மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

விலங்குகள்

  • சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் | SIMILIPAL BIOSPHERE RESERVE: யானை, புலி, சிறுத்தை, மீன் திண்ணி பூனை, நாற்கொம்பு மறிமான், செந்நிற கீரி, வல்லூறு மற்றும் மீன்திண்ணி கழுகு என 12 வகையான இருவாழ்விகள், 29 வகையான ஊர்வன, 260 வகையான பறவைகள் மற்றும் 42 வகையான பாலூட்டிகள் இங்குள்ளன.

பழங்குடியின மக்கள்

  • சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் | SIMILIPAL BIOSPHERE RESERVE: மைய மண்டலத்தில் நான்கு கிராமங்கள், தாங்கல் மண்டலத்தில் 61 கிராமங்கள் மற்றும் நிலைமாறு மண்டலத்தில் 1200 கிராமங்கள் என 1265 கிராமங்களில் வாழும் 4.5 லட்சம் மக்களை உள்ளடக்கிய இவ்வுயிர்க்கோளத்தில் பெருமபாலும் பூமிஜா, பாதுடி, கோலா, கொண்டா, சந்தல், கடியா மற்றும் மாங்கடியா போன்ற பழங்குடியினர்கள் வாழ்கின்றனர்.

அச்சுறுத்தல்கள்

  • சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் | SIMILIPAL BIOSPHERE RESERVE: வேட்டையாடுதல், காடழிப்பு, வனப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் மேய்ச்சல் போன்றவை மிக முக்கிய அச்சுறுத்தலாகும். 
  • அகந்த்ஷிகார் என்ற பழங்குடியினர்களின் வேட்டைத் திருவிழாவும் மிகமுக்கிய அச்சுறுத்தலாகும்.

ENGLISH

  • SIMILIPAL BIOSPHERE RESERVE: Spread over 4374 sq km in northern Orissa, this reserve was declared a Biosphere Reserve in 1994. Consisting of Eastern Plateau, Chota Nagpur Plateau, Lower Gangetic Plain and coastal areas, the reserve is a large watershed that is the source of many living rivers.
  • The region is rich in biodiversity, comprising several forest types such as tropical evergreen forests, tropical moist deciduous forests, and savanna regions. Among the flora found in India, flowering plants account for 7%, orchids for 8%, reptiles for 7%, birds for 20% and mammals for 11%.

Plants

  • SIMILIPAL BIOSPHERE RESERVE: About 1170 species of flowering plants including 94 species of orchids (two endemic), 8 endangered species, 8 endangered species and 34 rare species are found in this reserve. Trees such as water marut, sishu, chenpakam, sal and ilupai are found in abundance.

Animals

  • SIMILIPAL BIOSPHERE RESERVE: There are 12 species of amphibians, 29 species of reptiles, 260 species of birds and 42 species of mammals like elephant, tiger, leopard, pied cat, four-horned deer, red deer, vulture and pied eagle.

Tribal people

  • SIMILIPAL BIOSPHERE RESERVE: The biosphere comprises of 4.5 lakh people living in 1265 villages comprising of four villages in the central zone, 61 villages in the buffer zone and 1200 villages in the transitional zone and the Perumabalum Bhumija, Bhatudi, Gola, Konda, Chantal, Kadia and Mangatia tribes live in this biosphere.

Threats

  • SIMILIPAL BIOSPHERE RESERVE: Hunting, deforestation, collection of forest products and grazing are the major threats. Akandshikar, a tribal hunting festival, is also a major threat.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel