11th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஸ்வாதி ('SWATI') என்ற தளம் புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது
- இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் "பெண்களுக்கான அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு (SWATI)" தளத்தைத் தொடங்கிவைத்தார்.
- இது ஸ்டெம் (STEMM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. 2024 பிப்ரவரி 10, வரையிலான நேரடி வரி வசூல், ரூ.18.38 லட்சம் கோடியாக உள்ளது.
- இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 17.30 சதவீதம் அதிகமாகும். திரும்பப் பெறப்பட்ட தொகைக்குப் பின் நிகர நேரடி வரி வருவாய் ரூ. 15.60 லட்சம் கோடியாக உள்ளது.
- இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட 20.25 சதவீதம் அதிகமாகும். இது 2023-24 நிதியாண்டுக்கான நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 80.23 சதவீதம் ஆகும்.
- கார்ப்பரேட் வருமான வரி எனப்படும் சிஐடி மற்றும் தனிநபர் வருமான வரி எனப்படும் பிஐடி ஆகியவற்றின் மொத்த வருவாய் வசூலும் நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது.
- சிஐடி வளர்ச்சி விகிதம் 9.16 சதவீதம் ஆகவும், பிஐடி மட்டும் 25.67 சதவீதமும், எஸ்டிடி உட்பட பிஐடி 25.93 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
- பணத்தைத் திரும்பப்பெறுதல் சரிசெய்யப்பட்ட பிறகு, சிஐடி வசூலில் நிகர வளர்ச்சி 13.57 சதவீதம் ஆகும். பிஐடி வசூலில் 26.91 சதவீதமும் எஸ்டிடி உட்பட பிஐடி 27.17 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. 2023 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 10 வரை ரூ. 2.77 லட்சம் கோடி திரும்ப (ரீஃபண்ட்) வழங்கப்பட்டுள்ளது.
- ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்டான் அணி, கத்தாருடன் மோதியது.
- பரபரப்பாக நடந்த இப்போட்டியின் முதல் பாதியில் கத்தார் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் ஜோர்டான் அணியின் தஸ்பா அல்-இனாமத் முதல் கோலை அடித்தார்.
- தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கத்தார் அணி வீரர் அக்ரம் அபிஃப் இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
- இப்போட்டியில் கத்தார் அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ஜப்பான் அணியை தொடர்ந்து கத்தார் அணி தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் அடுத்த போட்டி 2027-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.