எனது கிராமம் திட்டம் / MY VILLAGE PROJECT (ENATHU GRAMAM THITTAM)
TNPSCSHOUTERSJanuary 14, 2024
0
எனது கிராமம் திட்டம் / MY VILLAGE PROJECT (ENATHU GRAMAM THITTAM): அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், ஊர் மக்களின் கல்வி மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திடவும் “எனது கிராமம்” என்ற இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதில் பள்ளி, மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டிடங்களைக் கட்டித்தரவும், சீரமைத்திடவும் அயலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
திட்டத்தில் பங்கேற்க உள்ள அயலகத் தமிழர்கள் வாயிலாக அவர்களது சொந்த ஊரில் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள்
எனது கிராமம் திட்டம் / MY VILLAGE PROJECT (ENATHU GRAMAM THITTAM): ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை போன்றவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
அங்கன்வாடி, பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், சமையல் கூடம், சுற்று சுவர், விளையாட்டு மைதானம், பூங்காக்கள், நூலகங்கள் போன்வற்றை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
கிராமப்புறங்களில் சாலை, பாலம் போன்ற வசதிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருதல், மழை நீர் சேகரிப்பு தொட்டி, நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் குழாய் வசதிகளை ஏற்படுத்துதல், குளம், குட்டை போன்றவற்றை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்.
நூலகத்தின் தரத்தினை உயர்த்தும் விதமாக, இணைய வசதி ஏற்படுத்தி தருதல், போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புதிய புத்தகங்கள் வழங்குதல்.
சுகாதார வசதிகளை மேம்படுத்தும் விதமாக கழிவறை, கழிவு நீர் கால்வாய் கட்டிதருதல், திட கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல்.
பூங்காக்கள், நீருற்று மற்றும் பிற சமுதாய கட்டிடங்கள்.
ENGLISH
MY VILLAGE PROJECT (ENATHU GRAMAM THITTAM): The project "My Village" has been started to improve the infrastructure in the native town where the neighboring Tamils were born and brought up and to fulfill the essential needs of the people like education and medicine. In this, neighboring Tamils will be invited to build and renovate buildings like schools, hospitals, libraries.
Actions to be taken by the neighboring Tamils who are going to participate in this program in their hometowns
MY VILLAGE PROJECT (ENATHU GRAMAM THITTAM): Improvement of infrastructure facilities of primary health center, hospital etc.
Construction and improvement of Anganwadi, school and college laboratories, additional classroom buildings, canteen, perimeter wall, playground, parks, libraries.
Construction and improvement of facilities like roads, bridges etc. in rural areas.
Provision of drinking water facilities, rain water collection tank, reservoir tank, drinking water pipe facilities, repair and maintenance of ponds, wells etc.
To improve the quality of the library, to provide internet facility and to provide new books to help the students preparing for the competitive examination.
Construction of latrines, sewage canals, improvement of solid waste management to improve sanitation facilities.