Type Here to Get Search Results !

9th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


9th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

யுனைட்டட் கோப்பை டென்னிஸ் 2024 - ஜெர்மனி சாம்பியன்
  • மொத்தம் 18 நாடுகள் பங்கேற்ற இத்தொடரின் 2வது சீசன் பைனலில் போலந்து – ஜெர்மனி அணிகள் மோதின. மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எளிதில் வீழ்த்தி போலந்துக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தார்.
  • ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (2வது ரேங்க்) போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்சை (9வது ரேங்க்) 6-7 (3-7), 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்த 1-1 என சமநிலை ஏற்பட்டது. 
  • இதைத் தொடர்ந்து, கலப்புர் இரட்டையர் ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக்/ஹூபர்ட் ஹர்காக்ஸ் ஜோடியுடன் ஜெர்மனி தரப்பில் லாரா சீஜ்மண்ட் – அலெக்சாண்டர் ஸ்வெரவ் இணை மோதியது. 
  • மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் ஜெர்மனி இணை 6-4, 5-7, 10-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றதை அடுத்து, ஜெர்மணி 2-1 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தி யுனைட்டட் கோப்பையை முத்தமிட்டது.
சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி குறித்த மாநாட்டை ஆர்இசி நிறுவனம் நடத்தியுள்ளது
  • மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஊரகப் பகுதி மின்மயமாக்கல் ஆணையம் (ஆர்.இ.சி), சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நிதி குறித்து விவாதிக்க அனைத்து முக்கியப் பங்குதாரர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில், மாநாடு ஒன்றை நடத்தியுள்ளது. 
  • புதுதில்லியில் நேற்று (ஜனவரி-8) நடைபெற்ற இந்த மாநாட்டில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய சாலைகள் காங்கிரஸ், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்போர் கூட்டமைப்பு, மாநில சாலை மேம்பாட்டு அமைப்புகள், தொழில்துறை கொள்கை வகுப்போர், சாலை மற்றும் கட்டுமான அமைப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
  • இந்த மாநாட்டின் போது, திலீப் பில்ட்கான் லிமிடெட், ஜிஎம்ஆர் பவர் & அர்பன் இன்ஃப்ரா, சிடிஎஸ் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் டிபி ஜெயின் & கோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் ரூ.16,000 கோடி மதிப்புள்ள நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
போட்டித்தேர்வுப் பயிற்சித் துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பது மற்றும் ஒழுங்குபடுத்துதல் குழுவின் கூட்டம் 
  • போட்டித்தேர்வுப் பயிற்சித் துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பது தொடர்பான வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சி.சி.பி.ஏ) சார்பில் நேற்று (08.01.2024) புதுதில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • இந்தக் குழுவின் தலைவரும் நுகர்வோர் நலத் துறையின் செயலாளருமான திரு ரோஹித் குமார் சிங் மற்றும் பிற உறுப்பினர்களும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கல்வித்துறை, தேசிய சட்டப்பல்கலைக் கழகம், லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
  • இந்த வரைவு வழிகாட்டுதல்கள் அனைத்து நேரடி மற்றும் இணையதளப் பயிற்சி நிறுவனங்களுக்கும் இணையதளத்திலோ அல்லது நேரடியாகவோ பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்தும் இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. 
  • தேர்வு பெற்ற நபரின் புகைப்படத்துடன் தேவையான தகவல்களைப் பயிற்சி நிறுவனம் குறிப்பிட வேண்டும், வெற்றிபெற்ற நபர் பெற்றுள்ள இடம், வெற்றிபெற்ற விண்ணப்பதாரரால் தேர்வு செய்யப்பட்ட பாடம், பயிற்சித் திட்டத்தின் கால அளவு, கட்டணப் பயிற்சி அல்லது இலவசம் குறித்த தகவல்கள் போன்றவை விளம்பரத்தில் இடம் பெறவேண்டும்.
  • மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் படி பயிற்சித் துறையால் தவறான விளம்பரங்களுக்கான அபராதம் விதிக்கப்படும். விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் தற்போதைய விதிகளின் கீழ் தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டிய அவசரத் தேவை இருப்பதாகவும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட வரைவு அம்சங்கள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்றும் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
  • பயிற்சி நிறுவனங்களின் தவறான விளம்பரத்திற்கு எதிராக சி.சி.பி.ஏ ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது. தவறான விளம்பரத்திற்காக 31 பயிற்சி நிறுவனங்களுக்கு சி.சி.பி.ஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றில் 9 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel