Type Here to Get Search Results !

3rd JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


3rd JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

லட்சத்தீவு, கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் மேல் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
  • லட்சத்தீவின் கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 
  • தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. மடிக்கணினி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய பிரதமர், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். விவசாயிகள், மீனவர் பயனாளிகளுக்கு பிரதமர் வேளாண் கடன் அட்டைகளையும் அவர் வழங்கினார்.
  • கொச்சி-லட்சத்தீவுகளின் நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டத்தை லட்சத்தீவின் கவரட்டியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் இணைய வேகத்தை அதிகரிக்க வழிவகுக்கும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் மூலம் லட்சத்தீவு இணைக்கப்படும். 
  •  விரைவான, நம்பகமான இணைய சேவைகள், தொலை மருத்துவம், மின் நிர்வாகம், கல்வி முன்முயற்சிகள், டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் நாணய பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்றவற்றிற்கு இது பயனளிக்கும்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் முதலாவது அனைத்து மகளிர் ராணுவப் பள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
  • உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் சம்வித் குருகுலம் மகளிர் ராணுவப் பள்ளியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஜனவரி 01, 2024 அன்று திறந்து வைத்தார். 
  • அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / தனியார் / மாநில அரசுப் பள்ளிகளுடன் இணைந்து 100 புதிய ராணுவப் பள்ளிகளை நிறுவும் முயற்சியின் கீழ் சுமார் 870 மாணவர்களுடன் முதலாவது அனைத்து மகளிர் ராணுவப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
இந்திய தரக்குழுமம் - கதர் மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • அகமதாபாத்தில் உள்ள கோச்ராப் ஆசிரமத்தில் கதர் பொருட்களுக்கான 'மேட் இன் இந்தியா' இயக்கத்தின் கீழ் கதர் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், கைவினைஞர்களுக்கு அதிகாரமளிக்கவும், தரமான தயாரிப்புகளை வழங்கவும், இந்திய தரக்குழுமம்- கதர் மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கேவிஐசி தலைவர் திரு. மனோஜ் குமார், இந்திய தரக் குழும தலைவர் திரு. ஜாக்ஸே ஷா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 
  • பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி உலகத் தரம் வாய்ந்த கதர் தயாரிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அமைந்துள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் தரத்தை உயர்த்துதல், அவற்றின் உற்பத்தித்திறன், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்திய தரக் கவுன்சில் உதவும். 
  • இதனுடன், கதர் கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், பல்வேறு ஊடகங்கள் மூலம் கதர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திற்கு ஆதரவளிக்கும். 
  • மேலும், இந்த ஒத்துழைப்பு கதர் தயாரிப்புகளுக்கு 'மேட் இன் இந்தியா' என்ற புதிய அடையாளத்தை வழங்கும், இது உலகெங்கிலும் தரத்தின் அடையாளமாக கதர் பொருட்களின் உற்பத்தி விற்பனையை அதிகரிக்கும். 
  • இது கதர் கைவினைஞர்களுக்கு மேம்பட்ட திறன்கள் அறிவை வழங்குவதன் மூலம் அதிக உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனுடன் புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும்.
ரயில்வே விகாஸ் நிகாம் உடன் ஆர்.இ.சி புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (ஆர்.இ.சி நிறுவனம்) அடுத்த 5 ஆண்டுகளில், ஆர்.வி.என்.எல் நிறுவனம் செயல்படுத்தவுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி வரை நிதியளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இந்தத் திட்டங்கள் பன்னோக்கு போக்குவரத்துத் திட்டங்கள், ரயில் உள்கட்டமைப்பு திட்டங்கள், சாலை, துறைமுகம் மற்றும் ஆர்.வி.என்.எல் தொடர்புடைய மெட்ரோ திட்டங்களை உள்ளடக்கியது.
  • கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தின் (ஆர்.இ.சி.) நிதிப்பிரிவு இயக்குநர் திரு அஜய் சவுத்ரி மற்றும் ஆர்.வி.என்.எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரிவு இயக்குநர் திரு ராஜேஷ் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆயுர்வேத மருத்துவ கற்பித்தல் நிபுணர்களுக்கான 'ஸ்மார்ட்' திட்டத்தின் 2-ம் கட்டம் அறிமுகம்
  • ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சி.சி.ஆர்.ஏ.எஸ்), இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் ஆகியவை நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுடன் இணைந்து வலுவான மருத்துவ ஆய்வுகளை ஊக்குவிக்க 'ஸ்மார்ட்' (கற்பித்தல் வல்லுநர்களிடையே ஆயுர்வேத ஆராய்ச்சியை பிரதானப்படுத்துவதற்கான வாய்ப்பு - Scope for Mainstreaming Ayurveda Research among Teaching professionals) என்ற திட்டத்தின் 2-ம் கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
  • சி.சி.ஆர்.ஏ.எஸ் என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனமாகும். ஆயுர்வேதத்தில் அறிவியல் ரீதியான ஆராய்ச்சியை உருவாக்குதல், ஒருங்கிணைத்தல், மேம்படுத்துதல் போன்ற பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. 
  • ஏற்கனவே 'ஸ்மார்ட் ' திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 38 கல்லுாரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்று, 10 நோய்களுக்கு வலுவான ஆயுர்வேத சிகிச்சைகள் குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel