Type Here to Get Search Results !

முக்கியமான விருதுகளின் பட்டியல் 2023 / LIST OF IMPORTANT AWARDS 2023


ஜனவரி
 • 26: தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு "பத்ம ஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டது.  
மார்ச்
 • 8: எழுத்தாளர், சமூக ஆர்வலர் ஆர்.கமலம் சின்னசாமிக்கு "ஒளவையார் விருதை' முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மின்தூக்கியில் (லிஃப்ட்) நிகழும் விபத்துகளைத் தடுக்கும் கருவியை உருவாக்கிய ப்ளஸ்-1 மாணவி இளந்திரைக்கு "சிறந்த மாணவர் விருது' வழங்கப்பட்டது. 
 • 13: "ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் "நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.  
ஜூன்
 • 5: உயிர்க்கோள பாதுகாப்பு மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குநரும் ராமநாதபுரம் மாவட்ட வனஅதிகாரியுமான பகன் ஜகதீஷ் சுதாகருக்கு யுனெஸ்கோவின் "மைக்கேல் பாடிஸ்úஸ விருது' வழங்கப்பட்டது. 
 • 22: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் கே.சுகந்தி உள்பட 30 பேருக்கு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2023-ஐ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 
ஜூலை
 • 14: பிரெஞ்சு மொழியைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியை நளினி ஜெ.தம்பிக்கு  "செவாலியர் விருதை' பிரெஞ்சு அரசு வழங்கியது. 
செப்டம்பர்
 • 23: தில்லியில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஆர்ஆர்ஐ) வேளாண் விஞ்ஞானி சுவாதி நாயக்குக்கு நார்மன் இ.போர்லாக் விருது வழங்கப்பட்டது. இவர் இந்த விருதைப் பெறும் 3-ஆவது இந்தியராவார். 
 • 26: இந்திய திரைப்படத் துறையில் உயரிய விருதான 2021-ஆம் ஆண்டுக்கான "தாதா சாகேப் பால்கே விருது' நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர்
 • ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
 • தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு, பணியிடத்தில் பாலின இடைவெளி, ஊதிய முரண்பாடு ஆகியவை தொடர்பான புரிதல்களை மேம்படுத்தும் ஆய்வுகளுக்காக க்ளாடியா கோல்டினுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
 • 2023-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பயனுள்ள mRNA தடுப்பூசிகளை உருவாக்க உதவும் நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக, கட்டாலின் கரிகோ (Katalin Kariko) மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman) ஆகிய இரண்டு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • நடப்பு ஆண்டில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பியரி அகோஸ்டினி, பெரென்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய 3 பேருக்கு நடப்பு ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரான் மற்றும் ஆற்றலை விரைவாக செயல்முறைப்படுத்தும் அளவீடுகளை பயன்படுத்துவதற்கான கருவிகளை கண்டறிந்ததால் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு, 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மௌங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 2023ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு 64 வயதாகும் ஜான் ஃபோஸ் அறிவிக்கப்பட்டது

ENGLISH

January
 • 26: "Padma Shri" Award was announced to snake catchers Vadivel Gopal and Masi Sadayan from Tamil Nadu.
March
 • 8: Writer and social activist R. Kamalam Chinnaswamy was presented with "Olavaiyar Award" by Chief Minister M. K. Stalin. "Best Student Award" was given to Plus-1 student Ilandrai, who developed a device to prevent accidents in elevators.
 • 13: The song "Nattu Nathu" from the film "RRR" wins the Oscar for Best Song. Directed by Karthiki Gonsalves, 'The Elephant Whisperers' won the Oscar in the Documentary category.
June
 • 5: Director of Gulf of Mannar Biosphere Reserve and Ramanathapuram District Forest Officer Bagan Jagadish Sudhakar has been awarded UNESCO's "Michael Patissus Award" for his outstanding work in biosphere conservation management.
 • 22: President Draupadi Murmu presented the National Florence Nightingale Award 2023 to 30 people including nurse K.Sukanti from Virudhunagar district.
July
 • 14: Puducherry University Professor Nalini J. Thambi was awarded the “Chevalier Award” by the French Government for her work in promoting the use of French.
 • September
 • 23: Swati Naik, an agronomist at the International Rice Research Institute (IRRI), Delhi, has been awarded the Norman E. Borlock Award. He is the 3rd Indian to receive this award.
 • 26: Actress Waheeda Rahman has been announced for the highest award in the Indian film industry "Dada Saheb Phalke Award 2021".
October
 • Imprisoned human rights activist Nargis Mohammadi has been awarded the Nobel Peace Prize for her fight against oppression of women in Iran.
 • Claudia Goldin was awarded the Nobel Prize in Economics for her research that improved understanding of women's participation in the labor market, the gender gap in the workplace, and wage inequality.
 • The 2023 Nobel Prize in Physiology or Medicine has been awarded to two doctors, Katalin Kariko and Drew Weissman, for their discoveries regarding nucleoside base changes that will help develop effective mRNA vaccines against Covid-19 infection.
 • The Nobel Prize in Physics is awarded to 3 people who have achieved in the field of physics in the current year. The Nobel Prize in Physics for the current year has been announced for 3 people from America, Germany and Sweden namely Pierre Agostini, Berenk Krause and Anne Houllier. It is said to be given by the discovery of tools for using measurements that process electrons and energy rapidly. The Nobel Prize in Chemistry for 2023 has been announced to be distributed to 3 chemical scientists. Three scientists, Maungi Pavendi from America, Louis Bruce and Alexey Ekimov from Russia, have been selected to receive the Nobel Prize in Chemistry. 3 Nobel Prizes have been announced for the discovery and synthesis of quantum dots.
 • 64-year-old John Fosse has been announced as the 2023 Nobel Prize in Literature

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel