Type Here to Get Search Results !

30th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


30th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாடு 2024
 • தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.
 • இந்த நிலையில், நேற்று ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து உரையாற்றினார்.
 • இம்மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, 'Guidance' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மற்றும் ஸ்பெயின் நாட்டு தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் சோனம் மஸ்கர்
 • எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.
 • இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோனம் மஸ்கர் 252.1 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சோனம் மஸ்கர் பங்கேற்கும் முதல் உலகக் கோப்பை தொடர் இதுவாகும்.
 • அறிமுக உலகக் கோப்பையிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சோனம் மஸ்கர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஜெர்மனியின் அனா ஜான்சன் 253 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், போலந்தின் அனெட்டா ஸ்டாங்கிவிச் 230.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் நிலை அறிக்கையை திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்
 • புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியக் கூட்டத்தில் இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் நிலை குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டார். 
 • இந்தியாவில் பனிச்சிறுத்தை மதிப்பீடு திட்டம் என்பது இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கையை மதிப்பிடும் திட்டமாகும்.
 • இந்திய வனவிலங்கு நிறுவனம் இந்தப் பயிற்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளது. லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் உட்பட இமயமலைப் பிராந்தியத்தில் சுமார் 120,000 சதுர கி.மீ பரப்பில் பனிச்சிறுத்தை வாழ்விடத்தை கண்டறியும் பயிற்சி 2019 முதல் 2023 வரை நடத்தப்பட்டது. 
 • அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு அடுக்கு பகுதியிலும் கேமரா பொறிகளைப் பயன்படுத்தி பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டது.
 • தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை பின்வருமாறு: லடாக் (477), உத்தரகண்ட் (124), இமாச்சலப் பிரதேசம் (51), அருணாச்சலப் பிரதேசம் (36), சிக்கிம் (21), ஜம்மு-காஷ்மீர் (9).
திரு. சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்
 • திரு சத்னம் சிங் சாந்துவை இன்று மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.
 • ஒரு விவசாயியின் மகனான சத்னம் சிங் சாந்து இந்தியாவின் முன்னணிக் கல்வியாளர்களில் ஒருவர். 
 • கல்வியை அடையப் போராடிய சாந்து, 2001-ம் ஆண்டில் மொஹாலியில் உள்ள லாண்ட்ரானில் சண்டிகர் குழுமக் கல்லூரிகளுக்கு (சி.ஜி.சி) முதலில் அடித்தளம் அமைத்ததன் மூலம் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தை உருவாக்குவதைத் தனது வாழ்க்கையின் குறிக்கோளாக மாற்றினார். இந்த நிறுவனம் க்யூஎஸ் உலகத் தரவரிசை 2023-ல் இடம் பிடித்தது. 
 • ஆசியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் முதன்மையானது. ஆரம்ப வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொண்ட சண்டிகர் பல்கலைக்கழக வேந்தர் சாந்து, ஓர் உறுதியான கொடையாளராக மாறியதைக் காணமுடிந்தது. தரமான கல்வியைத் தொடர லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவர் நிதி உதவி வழங்கியுள்ளார்.
 • 'இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை' மற்றும் புதிய இந்தியா வளர்ச்சி (என்ஐடி) அறக்கட்டளை ஆகிய இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், வகுப்புவாத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் பெரிய அளவிலான சமூக முயற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 
 • உள்நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான தனது முயற்சிகளால் அவர் ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளார் மற்றும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்களுடன் விரிவாகப் பணியாற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel