Type Here to Get Search Results !

24th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


24th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
  • இதனைத் தொடர்ந்து காலை 11.10 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 
  • பின்னர் ஆன்லைன் டோக்கன் எண் வரிசையின் அடிப்படையில் வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின் சில நிமிடங்கள் போட்டியைக் கண்டு ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
  • 500 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் களம் காண போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு. முன்பாகவே காளைகளுக்கும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
  • இப்போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 1 மகேந்திரா தார் ஜீப் காரும், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படுகிறது. 2வது பரிசு பெறும் காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு பைக் 50ஆயிரம் ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படுகிறது.
முக்கிய நேரடி வரி புள்ளி விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் நேரடி வரி வசூல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை அவ்வப்போது பொது தளத்தில் வெளியிட்டு வருகிறது. 
  • மேலும் தகவல்களை பொது தளத்தில் வைப்பதற்கான அதன் முயற்சிகளின் தொடர்ச்சியாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் 2022-23 நிதியாண்டு வரை புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கடந்த கால ஒப்பீடுகளுடன் கூடிய தரவை வெளியிட்டுள்ளது.
  • 2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேரடி வரி வசூல் 2022-23 நிதியாண்டில் ரூ.16,63,686 கோடியாக 160.52% அதிகரித்துள்ளது.
  • 2022-23 நிதியாண்டில் ரூ.19,72,248 கோடியாக இருந்த மொத்த நேரடி வரி வசூல், 2013-14 நிதியாண்டில் ரூ.7,21,604 கோடியாக இருந்த மொத்த நேரடி வரி வசூலுடன் ஒப்பிடுகையில் 173.31% அதிகரித்துள்ளது. 
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி வரி விகிதம் 2013-14 நிதியாண்டில் 5.62% ஆக இருந்தது, 2022-23 நிதியாண்டில் 6.11% ஆக அதிகரித்துள்ளது.
  • 2013-14 நிதியாண்டில் மொத்த வசூலில் 0.57% ஆக இருந்த வசூல் செலவு 2022-23 நிதியாண்டில் மொத்த வசூலில் 0.51% ஆக குறைந்துள்ளது.
  • 2022-23 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வருமான வரித் தாக்கலின் எண்ணிக்கை 7.78 கோடியாக உள்ளது, இது 2013-14 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட 3.80 கோடி வருமான வரித் தாக்கலின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 104.91% அதிகரித்துள்ளது.
டெசர்ட் நைட் விமானப்படைப் பயிற்சி 2024
  • இந்திய விமானப்படை, பிரெஞ்சு விமானப்படை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை இணைந்து ‘டெசர்ட் நைட்’ விமானப்படைப் போர்ப்பயிற்சியை 2024, ஜனவரி 23, 24 தேதிகளில் மேற்கொண்டன. 
  • இந்திய விமானப்படை சார்பில் சுகோய்-30 எம்கேஐ, மிக் -29, ஜாகுவார், அவாக்ஸ், சி-130-ஜே உள்ளிட்ட விமானங்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. பிரான்ஸ் சார்பில் ரஃபேல் போர் விமானம், மல்டி ரோல் டேங்கர் ஆகியவை பங்கேற்றன.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை சார்பில், எஃப்-16 ரக விமானம் இதில் பங்கேற்றது. இந்தக் கூட்டு விமானப்படைப் பயிற்சி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நடைபெற்றது.
  • மூன்று நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது இந்த ‘டெசர்ட் நைட்’ விமானப்படைப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். 
  • பயிற்சிகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், செயல்பாட்டு அறிவு, அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ள உதவின. இத்தகைய பயிற்சிகள், இந்திய விமானப்படையின் வலிமையை வெளிப்படுத்துவதோடு பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தவும் உதவும்.
இந்தியா - டொமினிகன் குடியரசு இடையே கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை அமைப்பதற்கான நெறிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை, டொமினிகன் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை உருவாக்குவதற்கான நெறிமுறைகளில் கையெழுத்திடும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்தியாவுக்கும், டொமினிகன் குடியரசுக்கும், இடையிலான இருதரப்பு உறவுகள் நட்பு ரீதியானவை மற்றும் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து ஆழமடைந்து வருகின்றன. 
  • தற்போது, இந்தியாவுக்கும், டொமினிகன் குடியரசுக்கும், இடையே வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு நிறுவன நடைமுறை எதுவும் இல்லை. 
  • இந்தியா முதன்மையாக டொமினிகன் குடியரசிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்கிறது மற்றும் அந்த நாட்டுக்கு மருந்துகள், கடல் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது. 
  • கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை அமைப்பதன் மூலம், இந்தியாவுக்கும், டொமினிகன் குடியரசுக்கும் இடையேயான பொருளாதார உறவு வலுப்பெறும்.
  • கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழு நிறுவப்படுவது பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதியில் உள்ள சவால்களைத் தணிக்க உதவும். 
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், வாகனங்கள் மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகுக்கும், இது தற்சார்பு இந்தியாவுக்கு அதிக அந்நிய செலாவணி வருவாய்க்கு வழிவகுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel