Type Here to Get Search Results !

22nd JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்
  • சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக ஹூண்டாய் கிரெட்டா, இன்னோவா கிரிஸ்டா மற்றும் பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கட்டப்பட்டுள்ள நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்து, மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
  • மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த சமூக பணியாளர் விருது, சிறந்த நிறுவனத்திற்கான விருது, சிறந்த ஆசிரியருக்கான விருது, சிறந்த பணியாளர் / சுய தொழில் புரிபவருக்கான விருது, மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருது, சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
  • கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகளையும், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகைக்கான காசோலைகளையும் வழங்குகினார்.
  • உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகுசாலை, விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடம் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது
  • உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் பிரதிஷ்டை கோலாகலமாக இன்று 12.30-க்கு நடைபெற்றது.  அயோத்தியில் குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த மஞ்சள் நிற துணி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அகற்றப்பட்டது. 
  • குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்ட போது ராமர் கோயிலின் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி  தலைமையேற்று செய்தார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமர்ந்திருந்தார்.
  • குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் தாமரை மலர்களைத் தூவி பிரதமர் மோடி வணங்கினார். நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் குழந்தை ராமர் சிலையின் முன்பு பிரதமர் மனமுருகப் பிரார்த்தனை செய்தார். 
  • ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம் என்று உணர்ச்சி பொங்க மக்கள் கோஷமிட்டு குழந்தை ராமரைப் பிரார்த்தனை செய்தனர். 
  • அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆயிரக்கணக்கான முக்கியத் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பாலராமர் பிரதிஷ்டையில் பங்கேற்றுள்ளனர். வண்ண விளக்குகளால் மிளிரும் அயோத்தியில் பாதுகாப்புக்காக நகரம் முழுவதும் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியா – கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி ‘கன்ஜார்’, இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கியது
  • இந்தியா-கிர்கிஸ்தான் இடையே 11-வது கூட்டு சிறப்புப் படை பயிற்சியான கன்ஜார், இமாச்சலப் பிரதேசத்தின் பக்லோவில் உள்ள சிறப்புப் படைப் பயிற்சிப் பள்ளியில் தொடங்கியது. 
  • இந்தப் பயிற்சி 2024 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 3வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும்.
  • 20 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் பிரிவில் பாராசூட் ரெஜிமென்ட் (சிறப்புப் படைகள்) மற்றும் கிர்கிஸ்தான் படைப்பிரிவில் 20 வீரர்கள் ஸ்கார்பியன் பிரிகேட் சார்பில் பங்கேற்கின்றனர்.
  • ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 7-வது அத்தியாயத்தின் கீழ் மலைப்பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சிறப்புப் படை நடவடிக்கைகளின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
  • சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் குறித்த பொதுவான கவலைகளுக்கு தீர்வு காணும் அதே வேளையில், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இரு தரப்பினருக்கும் இந்தப் பயிற்சி ஒரு வாய்ப்பை வழங்கும். 
  • பகிரப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களை அடைவதைத் தவிர, உள்நாட்டுப் பாதுகாப்பு உபகரணங்களின் திறன்களை வெளிப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை வளர்க்கவும் இந்தப் பயிற்சி வாய்ப்பளிக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel