21st JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக மின் வாரியத்திற்கு 'ஏ கிரேடு'
- நாடு முழுதும் உள்ள மின் வினியோக நிறுவனங்களின், 2022 - 23ம் ஆண்டுக்கான, நுகர்வோர் சேவைக்கான தரவரிசை மதிப்பீட்டு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
- இதை, மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், டில்லியில் வெளியிட்டு உள்ளார். அந்த பட்டியலில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள, 52 அரசு மற்றும் 10 தனியார் என, மொத்தம் 62 மின் வினியோக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
- மின் வினியோக செயல்பாட்டு நம்பகத்தன்மை, மின் இணைப்பு வழங்குவது, மின் கட்டணம் வசூல், மின்சார பிரச்னைக்கு தீர்வு காணுதல் ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்பெண் வழங்கி, ஒட்டு மொத்தமாக 'கிரேடு' வழங்கப்படுகிறது.
- அதன்படி, தமிழக மின் வாரியத்திற்கு, 'ஏ கிரேடு' வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021 - 22ம் ஆண்டு தரவரிசை பட்டியலில், தமிழக மின் வாரியம்,'பி பிளஸ் கிரேடு' பெற்றிருந்தது.
- மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று புதுதில்லியில் ஆயுஷ் தொழில் வல்லுநர்களின் மனிதவள மேம்பாட்டுக்கான முதலாவது மையமான 'ஆயுஷ் தீக்ஷா'வுக்கு அடிக்கல் நாட்டினார்.
- இந்த அதிநவீன மையம் புவனேஸ்வரில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்திற்குள் உருவாக்கப்படும்.