18th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை திறப்பு
- ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திரம் மாநிலம் விஜய நாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில், டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாகும். இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால் இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.
- இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலை திறந்து வைக்கப்பட்டதால், உலகில் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை என்ற பெருமை படைக்கும். இன்று மாலை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த சிலையை திறந்து வைத்தார்.
- இந்த அம்பேத்கர் சிலைக்கு அருகில் பூங்காக்கள், மினி தியேட்டர், அருங்காட்சியம், உணவு விடுதி, நீரூற்றுகள்,வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார்.
- இந்த நிகழ்விற்காக முக்கியமான தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை வெளியிட்டார்.
- ராமர் கோயில், சூரியன், சராயு நதி மற்றும் கோயில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கிய தபால் தலைகளை அவர் அறிமுகப்படுத்தினார். மேலும், உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய தபால் தலைகளின் ஆல்பத்தையும் வெளியிட்டார்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, நெதர்லாந்து சுகாதார நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இடையே மருந்துகள் மதிப்பீட்டு வாரியம், சுகாதாரம் மற்றும் இளைஞர் நல கண்காணிப்பகம், மனித ஆராய்ச்சி தொடர்புடைய மத்திய குழு சார்பில் "மருந்து தயாரிப்புகள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்காக 2023 நவம்பர் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இரு நாடுகளின் ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், மருந்து பயன்பாட்டிற்கான மூலப்பொருட்கள், உயிரியல் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட மருந்துகள் தொடர்பான மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறைகளை நன்கு புரிந்துகொள்ள உதவும்.
- மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), பொது சுகாதாரம் அமைச்சகத்தின் மருத்துவம், உணவுகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அமைப்புகளுக்கான தலைமை இயக்குநரகம் ஆகியவற்றுக்கும், டொமினிகன் குடியரசின் சுகாதார அமைச்சகத்தின் உணவு மற்றும் தூய்மைப் பொருட்கள் அமைப்பிற்கும் இடையே மேற்கொளள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023 அக்டோபர் 04 அன்று கையெழுத்தானது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மருத்துவப் பொருட்கள் தொடர்பான துறைகளில் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் அதிகார வரம்பிற்குள் தொடர்புடைய நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்ககளிலும் இது ஒத்துழைப்பை மேம்படுத்தும். சர்வதேச சந்தைகளில் தரமற்ற, போலியான மருந்துகளின் புழக்கத்தை தடுப்பதில் இணைந்து செயல்படுவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும், கென்யா அரசுக்கும் இடையே 2023 டிசம்பர் 5 ஆம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இரு நாடுகளிலும் டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் நெருங்கிய ஒத்துழைப்பு, அனுபவங்களை பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை மேம்படுத்துவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இருதரப்பும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலுக்கு வருவதுடன், 3 ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஈக்வடார் குடியரசின் சுகாதாரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு தேசிய ஒழுங்குமுறை நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் லியோபோல்டோ இஸ்கியேட்டா பெரெஸ் ஆகியோரிடையே 2023 நவம்பர் 07 அன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே ஒழுங்குமுறை அம்சங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்பதோடு, மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், சர்வதேச அமைப்புகளில் சிறந்த ஒருங்கிணைப்புக்கும் உதவும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (18.01.2024) நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியன் - இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TTC) செயல்திட்டத்தின் கீழ் குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்) சூழல் அமைப்புகள், அதன் விநியோகச் சங்கிலி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் குறித்த நடைமுறைகளுக்காக இந்திய அரசுக்கும், ஐரோப்பிய ஆணையத்துக்கும் இடையே 2023 நவம்பர் 21 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்திற்காக குறைக்கடத்தி பயன்பாட்டை மேம்படுத்துவதில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்பு சட்டம் 280-வது பிரிவின் கீழ், 2023 டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 16-வது நிதிக்குழுவிற்கு இணைச் செயலாளர் நிலையில் மூன்று பணியிடங்களை அதாவது, இரண்டு இணைச் செயலாளர் பணியிடம், ஒரு பொருளாதார ஆலோசகர் பணியிடம் ஆகியவற்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- புதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் நிதிக்குழுவின் பணிகளை மேற்கொள்ள உதவி புரிய வேண்டும்.
- குழுவின் மற்ற அனைத்துப் பணியிடங்களும் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின்படி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், சவுத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் நிறுவனம் 660 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- எஸ்இசிஎல் மற்றும் எம்பிபிஜிசிஎல் ஆகியவற்றின் கூட்டு முயற்சி மூலம் இதை அமைக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல், (மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்களை மகாநதி பேசின் பவ் லிமிடெட் மூலம் அமைப்பதற்கான பங்கு முதலீட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மத்தியப் பிரதேசம் சச்சாய் கிராமத்தில் உள்ள அமர்கந்தக் அனல் மின் நிலையத்தில் எஸ்இசிஎல் மற்றும் எம்பிபிஜிசிஎல் ஆகியவற்றின் கூட்டு முயற்சி மூலம் 660 மெகாவாட் அனல் மின் நிலையம் ரூ.5,600 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள இரண்டு 800 மெகாவாட் அனல் மின் நிலையம் ரூ.15,947 கோடி திட்ட மூலதனத்துடன் அமைக்கப்படும். இதில் எம்.சி.எல்லின் பங்கு மூலதனம் ரூ.4,784 கோடியாக இருக்கும்.
- மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமும், மகாரத்னா பொதுத்துறை நிறுவனமுமான ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிதிச் சேவைத் துறையில் (வங்கி, காப்பீடு அல்லாத) 2022-23 நிதியாண்டிற்கான சிறந்த நிதி அறிக்கைக்காக இந்தியா பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் 'பிளேக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
- இந்தப் பிரிவின் கீழ் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒரே விருது இதுவாகும். மேலும் நிறுவனத்தின் கணக்கியல் நடைமுறைகள், வெளிப்படுத்தல் கொள்கைகள், நிதி அறிக்கைகளை சமர்ப்பித்தல், ஆண்டு அறிக்கையில் உள்ள பிற தகவல்கள், இந்திய கணக்கியல் தரநிலைகள், சட்டரீதியான வழிகாட்டுதல்கள், ஒழுங்குமுறைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.