Type Here to Get Search Results !

15th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


15th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தேசிய நெடுஞ்சாலை அனுபவத்தை மேம்படுத்த, 'ஒரு வாகனம் ஒரு பாஸ்டேக்' முன்முயற்சியைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது
  • மின்னணு கட்டண வசூல் முறையின் செயல்திறனை அதிகரிக்கவும், சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை வழங்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 'ஒரு வாகனம், ஒரு பாஸ்டேக்' முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. 
  • இது பல வாகனங்களுக்கு ஒரே பாஸ்டேக்கைப் பயன்படுத்துவது அல்லது ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல பாஸ்டேக்குகளை இணைப்பது போன்ற பயனர் நடவடிக்கைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் -கேஒய்சி-யைப் புதுப்பிப்பதன் மூலம் தங்கள் சமீபத்திய ஃபாஸ்டேகின் கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கு பாஸ்டேக் பயனர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஊக்குவிக்கிறது. 
  • செல்லுபடியாகும் இருப்புத் தொகை கொண்ட ஆனால் முழுமையற்ற கேஒய்சி கொண்ட ஃபாஸ்டேகுகள் 2024 ஜனவரி 31 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்கச் செய்யப்படும் / கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.
  • அசௌகரியத்தைத் தவிர்க்க, பயனர்கள் தங்கள் சமீபத்திய ஃபாஸ்டேகின் கேஒய்சி நிறைவடைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஃபாஸ்டேக் பயனர்கள் 'ஒரு வாகனம், ஒரே பாஸ்டேக்' உடன் இணங்க வேண்டும். அந்தந்த வங்கிகள் மூலம் முன்னர் வழங்கப்பட்ட அனைத்து ஃபாஸ்டேகுகளையும் அகற்ற வேண்டும். 
  • முந்தைய குறிச்சொற்கள் 2024 ஜனவரி 31 க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்படும் / கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் சமீபத்திய ஃபாஸ்டேக் கணக்கு மட்டுமே செயலில் இருக்கும். 
  • மேலும் உதவி அல்லது கேள்விகளுக்கு, பாஸ்டேக் பயனர்கள் அருகிலுள்ள சுங்கச்சாவடிகள் அல்லது அந்தந்த வங்கிகளின் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை எண்ணை அணுகலாம்.
பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று போட்டி
  • பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவு பைனலில் 572 புள்ளிகள் பெற்று, இந்தியாவைச் சேர்ந்த யோகேஷ் சிங் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான அமித் குமார் ஆறாவது இடத்தையிம், ஓம் பிரகாஷ்12வது இடத்தையும் பெற்றனர்.
  • மேலும் ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் யோகேஷ் குமார், அமித் குமார், ஓம் பிரகாஷ் அடங்கிய இந்திய அணி 1690.34 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. 
  • அடுத்த இரண்டு இடங்களை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா கைப்பற்றி உள்ளன. ஏற்கனவே நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நான்சி 252.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் பெற்றது குறிப்பிடதக்கது. 
  • இதனைத் தொடர்ந்து, இதுவரை 14 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் என, 32 பதக்கங்களை பெற்று இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாம் இடத்திலும், தென்கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
உலக பொருளாதார அமைப்பின், 54வது ஆண்டு கூட்டம்
  • உலக பொருளாதார அமைப்பின், 54வது ஆண்டு கூட்டம், டாவோசில் இன்று துவங்குகிறது. இதில், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், தொழில் துறையினர் என, 100க்கும் மேற்பட்டோர், இந்தியாவின் சார்பில் பங்கேற்கின்றனர்.
  • அரசு - தனியார் ஒத்துழைப்பை உறுதி செய்யும் சர்வதேச அமைப்பான, உலக பொருளாதர அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், மாநாடு நடத்துகிறது. இதில், உலகத் தலைவர்கள் பங்கேற்று, சர்வதேச பொருளாதார பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பர்.
  • 15ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், உலகெங்கிலும் இருந்து, 2,800க்கும் மேற்பட்ட தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
  • இந்தாண்டு மாநாட்டில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, சுற்றுச்சூழல் பிரச்னை, பொய் செய்திகள், சில நாடுகளில் நடக்கும் போர்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel