Type Here to Get Search Results !

தைராய்டு விழிப்புணர்வு மாதம் / THYROID AWARENESS MONTH

  • தைராய்டு விழிப்புணர்வு மாதம் / THYROID AWARENESS MONTH: ஆண்டு தோறும் ஜனவரி மாதம் தைராய்டு விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைராய்டு என்பது நமது கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி ஆகும்.
  • பட்டாம்பூச்சி வடிவ இந்த சுரப்பி நமது மெடபாலிச நடவடிக்கைகள் தொடர்பான ஹார்மோன்களின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கிறது.
  • நம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு இது பொறுப்பாகும். தைராய்டு சுரப்பி மிக குறைவாக அல்லது அதிகமாக ஹார்மோன்களை உற்பத்தி செய்தால் ஏற்படும் நிலையே தைராய்டு நோய். 
  • பொதுவாக தைராய்டு பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. தைராய்டு சிக்கல் பற்றி பிரபல நிபுணர் ஹிமானி இன்டிவார் கூறுகையில், ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு கோளாறு வருவதற்கான வாய்ப்பு 5 முதல் 8 மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.
  • தைராய்டு பிரச்சனை எந்த வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த அல்லது மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். 
  • தைராய்டில் இரண்டு டைப் இருக்கின்றன. உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாக இருக்கும் நிலை ஹைப்போ தைராய்டிசம் என்றும், உடலில் தைராய்டு ஹார்மோன் அதிகமாக இருக்கும் நிலை ஹைப்பர் தைராய்டிசம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • அறியப்படாத காரணங்களால் உடலில் ஹார்மோன்களின் அதிகரிக்கும் போது அல்லது குறையும் போது இந்த நிலைமைகள் ஏற்படுகின்றன.

ஹைப்போதைராய்டிசம் (Hypothyroidism) இருப்பதற்கான அறிகுறிகள்

  • தைராய்டு விழிப்புணர்வு மாதம் / THYROID AWARENESS MONTH: தீவிர அறிகுறிகள் வெளிப்படும் வரை சில பிரச்சனைகளுக்கு தைராய்டு சுரப்பி காரணம் என்பதை நம்மால் அறிய முடியாமல் போகலாம். 
  • உதாரணமாக கரடுமுரடான மற்றும் வறண்ட சருமம் மற்றும் எளிதில் உடைய கூடிய நகங்கள் ஹைப்போ தைராய்டிசம் இருப்பதற்கான அறிகுறிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஹைப்போ தைராய்டிசம் இருப்பதற்கான மிக பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு.
  • அடிக்கடி சோர்வாக இருப்பது
  • காரணமேயின்றி டிப்ரஷனில் சிக்கி தவிப்பது
  • உடல் எடை அதிகரிப்பு
  • மலச்சிக்கல் மற்றும் திடீர் எடை அதிகரிப்பு
  • வழக்கத்தை விட வியர்வை குறைவாக வெளியேறுவது, குளிருக்குக்கு சென்சிட்டிவாக இருப்பது, ஹார்ட் ரேட் குறைவது, சரும வறட்சி
  • அதிகரித்த பிளட் கொலஸ்ட்ரால், நினைவாற்றல் பலவீனமடைவது, தசைகள் பலவீனமடைவது
  • தசை விறைப்பு மற்றும் வலி
  • வறண்ட முடி மற்றும் நன்கு அடர்த்தியாக இருந்த கூந்தல் திடீரென மெலிவது
  • மூட்டுகளில் விறைப்பு மற்றும் வலி

ENGLISH

  • THYROID AWARENESS MONTH: Every year January is celebrated as Thyroid Awareness Month. Thyroid is a gland in our neck. This butterfly-shaped gland determines the growth and regulation of hormones related to our metabolic activities.
  • It is responsible for producing hormones vital to our health and well-being. Thyroid disease is a condition where the thyroid gland produces too little or too much hormone. 
  • Thyroid problems are more common in women than in men. Himani Intiwar, a famous expert on thyroid problems, has given shocking information that women are 5 to 8 times more likely to develop thyroid problems than men.
  • Although thyroid problems can affect people of any age, women who have recently given birth or are in menopause and women aged 60 and over are more likely to be affected, he said. There are two types of thyroid. 
  • A condition in which thyroid hormone is low in the body is called hypothyroidism and a condition in which thyroid hormone is high in the body is called hyperthyroidism. These conditions occur when hormones increase or decrease in the body for unknown reasons.

Symptoms of Hypothyroidism

  • THYROID AWARENESS MONTH: We may not know that the thyroid gland is the cause of some problems until serious symptoms appear. For example rough and dry skin and brittle nails are listed as symptoms of hypothyroidism. Following are the most common symptoms of hypothyroidism.
  • Being tired often
  • Feeling depressed for no reason
  • Weight gain
  • Constipation and sudden weight gain
  • Sweating less than usual, sensitivity to cold, slow heart rate, dry skin
  • Increased blood cholesterol, memory impairment, muscle weakness
  • Muscle stiffness and pain
  • Dry hair and sudden thinning of previously thick hair
  • Stiffness and pain in joints

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel