14th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு
- 2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியை பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது.
- சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில், இந்தியாவுக்கு 11ஆவது இடம் அளித்திருந்தது.
- நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி, இந்திய துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாஸ்மதி அரிசி ரகங்கள் பயிரிடப்படுகிறது.
- பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுகலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான 14 வது கூட்டம்
- இந்தியா - அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் அளவிலான 14 வது கூட்டம் (டிபிஎஃப் ) 2024 ஜனவரி 12, அன்று புதுதில்லியில் நடைபெற்றது.
- இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் கேத்ரின் டாய் ஆகியோர் டிபிஎஃப் கூட்டத்திற்கு இணைத் தலைமை வகித்தனர்.
- பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி தூதர் கேத்ரின் டாய் உடன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு சிறிய குழு கூட்டத்தையும் நடத்தியது.
- இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துவதிலும், நாடுகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த பொருளாதார கூட்டாண்மையை உயர்த்துவதிலும் டிபிஎஃப்- ஐ திறம்பட செயல்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். கூட்டத்திற்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.