13th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எனது கிராமம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
- திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஒவ்வொரு ஆண்டும் அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது.
- அதன்படி 3வது ஆண்டாக தற்போது சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தமிழ் வெல்லும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நடைபெற்றது.
- இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர். துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து 1400-க்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளியினர், அமைச்சர் பெருமக்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- முதல் நாள் (ஜனவரி 11) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயலகத் தமிழர் தின விழாவைத் தொடங்கி வைத்தார்.
- அங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். இதில், சிறப்பு நிகழ்ச்சியாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
- அதனைத்தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது.
- இரண்டாம் நாள் (ஜனவரி 12) அயலகத் தமிழர் தினம் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், எனது கிராமம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.
- இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
- திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும்.
- இந்த புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனத்திற்கு மேகமலையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. மேகமலை என்றால் மேகம் மலை என்று பொருள்படும்.
- தேனியைச் சேர்ந்த வனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர்.காலேஷ் சதாசிவம், திரு.எஸ்.இராமசாமி காமையா மற்றும் டாக்டர்.சி.பி.ராஜ்குமார் ஆகியோர் கண்டுபிடிதுள்ளனர். இது "என்டோமான்"என்னும் அறிவியல் ஆய்வு இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த கண்டுபிடிப்பின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் வகை எண்ணிக்கை மொத்தம் 337ஆக உயர்ந்துள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 40 வகையும் அடங்கும்.
- நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட (3 x 800 மெகாவாட் - நிலை 1) பிட் ஹெட் கிரீன் ஃபீல்ட் அனல் மின் திட்டத்தை அமைப்பதற்கான ஐபிசி வழியிலான ஒப்பந்தத்தை பெல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
- இந்தத் திட்டம் மிக உயர்ந்த வெப்பம் மற்றும் அழுத்தத்தில் செயல்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் உற்பத்தியாகும் 2400 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாடு, ஒடிசா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான மின் கொள்முதல் ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது.
- பாய்லர்கள், டர்பைன், ஜெனரேட்டர்கள், ஆலைகளின் சமநிலை, எஃப்ஜிடி மற்றும் எஸ்.சி.ஆர் போன்ற உபகரணங்களின் பொறியியல், உற்பத்தி, வழங்கல், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவை 3 X800 மெகாவாட் - 2400 மெகாவாட் நிலை -1-ல் அடங்கும்.
- இந்த அனல் மின் திட்டத்திற்காக, ஒடிசாவின் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களில் 2020 முதல் செயல்பட்டு வரும் என்.எல்.சி.ஐ.எல் இன் தலாபிரா 2 மற்றும் 3 சுரங்கங்களிலிருந்து ஆண்டுக்கு 20 மில்லியன் டன் நிலக்கரி கிடைக்கிறது.
- இந்தத் திட்டத்திற்குத் தேவையான நீர் ஹிராகுட் நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஐ.எஸ்.டி.எஸ் மற்றும் எஸ்.டி.யு நெட்வொர்க் மூலம் வெளியே அனுப்பப்படும்.
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை நிறைவேற்ற எஃப்.ஜி.டி மற்றும் எஸ்.சி.ஆர் போன்ற சமீபத்திய மாசு கட்டுப்பாட்டு உபகரணங்களுடன் இந்த திட்டம் செயல்படும்.
- எரிசக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க பசுமை முன்முயற்சியின் ஒரு பகுதியாக பயோ மாஸ் கையாளுதல் அமைப்புகளுடன் இணைந்து கொதிகலன்கள் வடிவமைக்கப்படும்.
- இத்திட்டத்தின் முதல் அலகு 2028-29 நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. பிட் ஹெட் அனல் மின் திட்டம் என்பதால், மாறுபடும் செலவு குறைவாகவே இருக்கும். மேலும் என்.எல்.சி இந்தியா, அதன் பயனாளிகளுக்குக் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும்.