12th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம் - பிரதமர் மோடி திறந்துவைத்தார்
- மகாராஷ்டிரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும். கடந்த 2016 டிசம்பரில் பிரதமர் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
- கடல் பாலம் மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீ. இதில் கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தொலைவிற்கு பாலம் அமைந்துள்ளது.
- இப்பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான பயணத்தை வழங்கும். மேலும், இப்பாலம் மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தை குறைக்கும்.
- நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இளைஞர்களை ஒரு முக்கிய அங்கமாக மாற்றுவது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்த முயற்சியின் மற்றொரு பகுதியாக, நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை (என்ஒய்எஃப்) பிரதமர் தொடங்கி வைத்தார்.
- சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 முதல் 16 வரை ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவை நடத்தும் மாநிலம் மகாராஷ்டிரா.
- வளர்ச்சியடைந்த இந்தியா Bharat@ 2047: இளைஞர்களுக்காக இளைஞர்களால் என்பது இந்த ஆண்டு விழாவின் கருப்பொருள் ஆகும்.
- ஒடிசா கடற்கரையில், நவீன தலைமுறையைச் சேர்ந்த ஆகாஷ் (ஆகாஷ் என்.ஜி) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது மிக குறைந்த உயரத்தில், அதிவேக ஆளில்லா வான்வெளி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
- இந்த ஏவுகணை சோதனையை ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் டிஆர்டிஓ வெற்றிகரமாக செய்தது. இந்த ஏவுகணை செயல்பாடுகள் ஐடிஆர் சண்டிபூர் அமைத்த ரேடார், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் அமைப்புகள் சேகரித்த தரவுகள் மூலம் சரிபார்க்கப்பட்டது.
- "இந்தியாவுக்கான பசுமை மாற்றத்தைக் கண்டறிதல்" என்ற தலைப்பில் பருவநிலை மாநாடு 2024, 12 ஜனவரி 2024 அன்று மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்றது.
- மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப திறன்களைத் திரட்டுவதில் தனியார் துறை, பருவநிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் முக்கியப் பங்கு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
- அரசின் முயற்சிகளை மேம்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் சமூகங்களை ஈடுபடுத்துவது மற்றும் புதுமையான பருவநிலை சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.