Type Here to Get Search Results !

2023ம் ஆண்டுக்கான தந்தை பெரியார், அம்பேத்கர் விருதுகள் / Periyar Awards 2023 & Ambedkar Awards 2023

 • 2023ம் ஆண்டுக்கான தந்தை பெரியார், அம்பேத்கர் விருதுகள் / Periyar Awards 2023 & Ambedkar Awards 2023: தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் சமூக நீதிக்கான 'தந்தை பெரியார் விருதினை' வழங்கி கௌரவித்து வருகிறது.
 • அந்தவகையில் 2023-ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான 'தந்தை பெரியார் விருது'-க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • அதே போன்று, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. 
 • அந்தவகையில், 2023-ஆம் ஆண்டிற்கான 'டாக்டர் அம்பேத்கர் விருது'-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.
 • சமூகநீதிக்கான 'தந்தை பெரியார் விருது' பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுப. வீரபாண்டியன், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் தந்தை பெரியாரின் பற்றாளர். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். அவர் ஆரியத்தால் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம். தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை முன்வைத்து, 2007 ஆம் ஆண்டுதிராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர்.
 • தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அவர், கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழ் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டவர் தந்தை பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவு முதலான கருத்துகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். சுப. வீரபாண்டியன் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
 • 'டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது' பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள பி. சண்முகம் , தமிழ்நாட்டில் 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார்.
 • மேலும், தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும்பங்காற்றியுள்ளார். வாச்சாத்தி உண்மையின் போர்க்குரல், வாச்சாத்தி வன்கொடுமை போராட்டம் வழக்கு தீர்ப்பு, தீக்கதிர் நாளிதழில் வனமக்கள் வாழ்க்கை வளம்பெற - வனங்களை பாதுகாப்பது மக்களே போன்ற செய்தி தொகுப்புகளையும் . சண்முகம் எழுதியுள்ளார்.

ENGLISH

 • Periyar Awards 2023 & Ambedkar Awards 2023: The Government of Tamil Nadu has been honoring the 'Periyar Award' for social justice every year to honor those who strive for social justice. In this way, Social Justice Monitoring Committee Chairman Subh. Veerapandian has been selected.
 • Similarly, 'Dr. Ambedkar Award' is given annually to encourage people from Tamil Nadu who are striving for the betterment of Adi Dravidian and tribal people. In that way, one of the senior leaders of the Marxist Communist Party, P. Shanmugam has been selected.
 • The Chief Minister of Tamil Nadu will present the awards to the awardees tomorrow. The awardees will be awarded with an award amount of Rs.5 lakh, a gold medal and a certificate of merit.
 • Chosen for the 'Periyar Award' for Social Justice. auspicious Veerapandian was a devotee of Periyar who was involved in Dravidian movement principles. He is working as the Chairman of the Social Justice Monitoring Committee set up by the Government of Tamil Nadu. He fell by Arya and rose by Dravida. In 2007, he founded a movement called Dravidian Movement Tamils Council, with the slogan 'We will win by Tamiliyam'.
 • Having worked as a professor of Tamil, he voluntarily retired, while he was working in the college, he formed an organization called the Tamil Tamil Movement and is active in implementing the principles of Father Periyar such as social justice, caste abolition, anti-dominance, mother tongue, women's liberation and rationality. auspicious Veerapandian has received Kalaimamani Award and has written and published 54 books so far.
 • B. has been selected to receive the 'Dr. Ambedkar Tamil Nadu Government Award'. Shanmugam has worked for the welfare of the hill people as the president of the hill people's association in Tamil Nadu for 32 years.
 • Also, he has played a major role in getting justice by holding great protests against the brutality of hill people and women in Vachathi village of Dharmapuri district. War cry of Vachathi truth, Vachathi brutality struggle case judgment, Dikkadir newspaper to prosper the life of forest people - Protecting forests is the people and also news compilations. Written by Shanmugam.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel