மத்திய ஆயுதப்படைப் படைகள் மற்றும் ரைபிள்மேன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு / Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles Examination Recruitment 2024
மத்திய ஆயுதப்படைப் படைகள் மற்றும் ரைபிள்மேன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் 26146 காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான வரும் 2024 ஆம் ஆண்டு பிப்பரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கு தகுதியானவர் இந்திய இளைஞர்களிடம் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது.
மத்திய ஆயுதப்படைகள், எஸ்எஸ்எப் மற்றும் ரைபிள்மேன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் காலியாக உள்ள 26,146 காவலர் (பொதுப்பணி) பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி உள்ளவர்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடல்திறன், மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்தப் பணியிடத்துக்கு 1.7.2023 தேதியின்படி பொதுப் பிரிவினா் 18 முதல் 23 வயது வரையிலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில்லை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தோ்வுக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ.100. தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் கூடுதல் தகவல்களை, https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்