7th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தெலங்கானா முதலமைச்சரானார் ரேவந்த் ரெட்டி
- தெலங்கானாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றிபெற்று முதன்முறையாக, பி.ஆர்.எஸ்ஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
- டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரேவந்த் ரெட்டியை முதல்வராக்க முடிவுசெய்தது காங்கிரஸ் தலைமை.
- அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், அவரோடு 11 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, ஹைதராபாத்திலுள்ள எல்.பி ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா தொடங்கியது.
- இதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
- பின்னர், பதவியேற்பு விழா தொடங்கியதும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்துவைக்க, தெலங்கானாவில் காங்கிரஸின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி. அவரைத் தொடர்ந்து, மாநிலத்தின் துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்கா பதவியேற்றார்.
- இவர்களோடு, உத்தம் குமார் ரெட்டி, கோமதிரெட்டி, வெங்கட் ரெட்டி, சீதக்கா, பொன்னம் பிரபாகர், ஸ்ரீதர் பாபு, தும்மல நாகேஷ்வர் ராவ், கொண்டா சுரேகா, ஜூபாலி, கிருஷ்ணா பொங்குலேட்டி ஆகிய 10 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகராக, கதம் பிரசாத் குமாரை காங்கிரஸ் தேர்வுசெய்திருக்கிறது.
- மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் 2வது தவணையில் உள்ள நிதி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.493.60 கோடி ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். முதல் தவணையை இரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது.
- ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 'அக்னி -1' இன்று ( டிசம்பர் 07, 2023) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அக்னி-1 ஏவுகணை மிகவும் துல்லியமான ஏவுகணையாகும்.
- இது மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது. இந்த சோதனையின்போது அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது.