Type Here to Get Search Results !

21st DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


21st DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மாநிலங்களவையிலும் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமனத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் தொலைத்தொடர்பு மசோதா நிறைவேறியது
  • தொலைத்தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளர்ச்சி, தொலைத்தொடர்பு சேவை, தொலைத்தொடர்பு வலைப்பின்னல் (நெட்ஒர்க்ஸ்), அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டு வரப்பட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 
  • தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் இதனை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று (புதன் கிழமை) மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமனத்தை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
  • தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம், தேர்தல் ஆணையர்கள் நியமனம், அவர்களது சேவைக் காலம், பதவியில் இருக்கும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் தொடர்பாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையில் இன்று நிறைவேறியது.
  • இதேபோல், பத்திரிகைகள், இதழ்கள் ஆகியவற்றை பதிவு செய்வதற்கான சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். 
  • இது தொடர்பாக ஏற்கெனவே உள்ள பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம் 1867-க்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் இந்த சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 30 நாட்கள் கால அவகாசத்துக்குள் சரணடையாவிட்டால், தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறைகளை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளை இழக்கிறார் என்பதால், அவர் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உயர்கல்வித்துறை இலாகாவானது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டுள்ளது. 
  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறையை கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதனை உடனடியாக ஏற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • அதேபோல, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முதலமைச்சரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel