Type Here to Get Search Results !

2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருது / ARJUNA, KHEL RATNA & DRONACHARYA AWARD 2023

  • 2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருது / ARJUNA, KHEL RATNA & DRONACHARYA AWARD 2023: 2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.:
  • அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. 
  • அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலை தற்போது மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
  • அதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
  • தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ப்ளேயரான வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தயான் சந்த் கேல் ரத்னா விருது - பேட்மிண்டன் வீர்ர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அர்ஜூனா விருது - வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி, கிரிக்கெட் வீர்ர் முகமது ஷமி, தடகள வீரர் சங்கர், செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது - லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி. ரமேஷ் (செஸ்), மகாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), ஷிவேந்திர சிங் (ஹாக்கி), ஸ்ரீ கணேஷ் பிரபாகர் தேவ்ரூக்கர் (மல்லாகம்ப்) ஆகிய 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).
  • விருது வழங்கும் விழா ஜனவரி 9-ம் தேதி காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • ARJUNA, KHEL RATNA & DRONACHARYA AWARD 2023: The Union Ministry of Sports has announced the Arjuna, Khel Ratna and Dronacharya awards for the year 2023.
  • Accordingly, the Arjuna Award has been announced to cricketer Mohammad Shami, Tamil Nadu chess player Vaishali and others. Grandmaster RB Ramesh, a chess coach from Tamil Nadu, has been awarded the Dronacharya Award and Kabaddi player Kavita Selvaraj from Tamil Nadu has been awarded the Dayan Chand Lifetime Achievement Award.
  • Arjuna, Khel Ratna, Dronacharya, Major Dayan Chand, Major Dayan Chand Khel Ratna Awards are given by the Central Government to honor sportsmen and women who have made outstanding contributions in the field of sports. 
  • Accordingly, the Union Ministry of Youth Welfare and Sports has released the award list for this year. The Indian cricket team's fast bowler Mohammad Shami has been awarded the Arjuna Award. He played 7 matches in the recent World Cup cricket and took 24 wickets.
  • Vaishali, a chess player from Tamil Nadu, has also been announced for the Arjuna Award. It is noteworthy that he recently won the title of Grand Master. 
  • Grandmaster RB Ramesh, a chess coach from Tamil Nadu, has been awarded the Dronacharya Award and Kabaddi player Kavita Selvaraj from Tamil Nadu has been awarded the Dayan Chand Lifetime Achievement Award.
  • Dayan Chand Khel Ratna Award - Badminton players Chirak Chandrasekhar Shetty, Rangritty Satvik Sai Raj have been announced.
  • Arjuna Award - Archery player Aditi Gopichand Swamy, cricketer Mohammed Shami, athlete Shankar, chess player Vaishali have been announced to 26 people.
  • Dronacharya Award for Sports Coaches - Lalit Kumar (Wrestling), R.P. Ramesh (Chess), Mahaveer Prasad Saini (Para Athletics), Shivendra Singh (Hockey) and Shri Ganesh Prabhakar Devrukkar (Mallacamp) have been notified.
  • Dayan Chand Lifetime Achievement Award: Manjusha Kanwar (Badminton), Vineet Kumar Sharma (Hockey), Kavita Selvaraj (Kabaddi).
  • It has been announced that the award ceremony will be held on January 9 at 11.00 am at the President's House.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel