Type Here to Get Search Results !

1st DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


1st DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பருவநிலை உச்சி மாநாடு 2023
 • சி.ஓ.பி., 28 எனப்படும் ஐ.நா.,வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடக்கிறது. இதில், யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி துபாய் சென்றுள்ளார். 
 • இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2028ல் பருவநிலை உச்சி மாநாட்டினை இந்தியாவில் நடத்தும் திட்டத்தினை முன்மொழிந்தார். பிரதமருக்கு கவுரவம் இந்த மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்தும்படி பிரதமர் மோடிக்கு, யுஏஇ சார்பில் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
 • ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. 
 • Conference of the Parties (COP) என்பது 1992-ம் ஆண்டு ஐ.நா சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் உச்சி மாநாட்டை குறிப்பதாகும்.
 •  துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா சபையின் 28-வது உச்சி மாநாடு COP28 என அழைக்கப்படுகிறது. நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. 
 • இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் கலந்து கொள்கின்றன. புவி வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவது குறித்து ஆராய்வதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
அயோத்திதாசர் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர்
 • அயோத்திதாச பண்டிதருக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
 • அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் வளாகத்தில் ரூ.2.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அயோத்திதாசர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலையையும் திறந்துவைத்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் என்.டி.டி.எஃப் உடன் என்.எல்.சி.ஐ.எல் புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட் (என்.எல்.சி.ஐ.எல்), தற்போதைய தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பதில் முன்னோடி நிறுவனமான பெங்களூரு நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை (என்.டி.டி.எஃப்), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னையில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
 • என்.எல்.சி.ஐ.எல், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் என்.டி.டி.எஃப் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மூலம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.ஐ.எல் இயக்கப் பகுதிகளில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் 540 வாரிசுகளுக்கு வேலை சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். 
 • என்.எல்.சி.ஐ.எல் தனது மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்த்தலுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இந்த இலவச குடியிருப்புத் திட்டத்திற்காக ஒரு விண்ணப்பதாரருக்கு ரூ.1.12 லட்சம் செலவிட உறுதியளித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறவும், முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் இந்தத் திட்டம் உதவும்.
 • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், நிர்வாக இயக்குநர் திரு பிரபு கிஷோர்.கே மற்றும் என்.எல்.சி.ஐ.எல் மற்றும் மாநில அரசின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
 • திட்ட மேம்பாட்டிற்காகத் தங்கள் நிலம் மற்றும் வீடுகளை என்.எல்.சி.ஐ.எல்-க்கு வழங்கியதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை நோக்கிய என்.எல்.சி.ஐ.எல்-இன் மற்றொரு முக்கிய முன்முயற்சி இதுவாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel