Type Here to Get Search Results !

13th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
  • இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரது நியமனம், பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
  • தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் காலம்) மசோதா-2023, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • கடந்த 1991-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் குறித்து இடம்பெறாத நிலையில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரிலும் 33% மகளிா் இடஒதுக்கீடு - மக்களவையில் இரு மசோதாக்கள் நிறைவேற்றம்
  • ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு 2-ஆவது திருத்த மசோதா, யூனியன் பிரதேச அரசுகள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தாா்.
  • அமைச்சரின் பதிலைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
  • கடந்த செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடா்ந்து, இந்த மசோதா சட்டமானது.
  • இந்நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களுக்கும் மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்தத்தின்படி, நாட்டில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடைபெறும் மக்களவை மற்றும் பேரவைத் தொகுதி மறுவரையறைக்குப் பிறகே மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இதனால், நாட்டில் மகளிா் இடஒதுக்கீடு அமலாக சற்று காலமெடுக்கும் என்று தெரிகிறது. இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதன்பின்னா், நாடாளுமன்ற முடிவுக்கேற்ப அது நீட்டிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்கள் பதவியேற்பு
  • மத்திய பிரதேசத்தில்., பா.ஜ., 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். ஆனால் இமாலய வெற்றியை பா.ஜ., பதிவு செய்து பட்டையை கிளப்பியது.
  • மத்தியப் பிரதேசத்தில் 4 முறை சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்த நிலையில், தற்போது மோகன் யாதவை புதிய முதல்வராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.
  • இந்நிலையில், போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவுக்கு அம்மாநில கவர்னர் மங்குபாய் சாகன்பாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
  • அவருடன் துணை முதல்வர்கள் ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நட்டா, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
  • சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தேவ் சாய் இன்று பதவியேற்றார். இதற்கான விழாவிலும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
போலந்து புதிய பிரதமராக டொனால்டு டஸ்க் பதவியேற்பு
  • போலந்தில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து, மத்தியவாதக் கட்சித் தலைவர் டொனால்டு டஸ்க்கின் தலைமையில் அரசு அமைக்க, வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தனர்.
  • இதனைத் தொடர்ந்து டிச.12 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், டஸ்க் தலைமையிலான அரசுக்கு ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், போலந்தில், சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் 8 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில், போலந்து அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டொனால்டு டஸ்க்குக்கு, போலந்து அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel