Type Here to Get Search Results !

7th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


7th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தேசிய நிலக்கரி குறியீடு செப்டம்பரில் 3.83 புள்ளிகள் உயர்ந்துள்ளது
 • தேசிய நிலக்கரி குறியீட்டெண் செப்டம்பரில் 3.83 புள்ளிகள் உயர்ந்து 143.91 ஆக உள்ளது. இது நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு முதல் முறையான உயர்வாகும்.
 • தேசிய நிலக்கரி குறியீட்டெண் 2020 ஜூன் 4 அன்று நிலக்கரி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இது நிலையான அடிப்படை ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நிலக்கரியின் விலையில் ஏற்படும் மாற்றத்தை பிரதிபலிக்கும் விலைக் குறியீடாகும்.
 • சந்தை அடிப்படையிலான நடைமுறையின் அடிப்படையில் பிரீமியம் (ஒரு டன் அடிப்படையில்) அல்லது வருவாய் பங்கை (சதவீத அடிப்படையில்) தீர்மானிக்க தேசிய நிலக்கரி குறியீட்டெண் (என்.சி.ஐ) பயன்படுத்தப்படுகிறது .
 • இந்தக் குறியீடு இந்தியச் சந்தையில் கச்சா நிலக்கரியின் அனைத்து பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியது. ஒழுங்குபடுத்தப்பட்ட (மின்சாரம் மற்றும் உரம்) மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் பல்வேறு தரங்களில் பயன்படுத்தப்படும் உலோகவியல் நிலக்கரி மற்றும் உலோகவியல் அல்லாத நிலக்கரி ஆகியவையும் இதில் அடங்கும்.
 • நாட்டில் வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் காரணமாக நிலக்கரியின் தேவை அதிகரித்து வருவதையே என்.சி.ஐ-யின் உயர்வு குறிக்கிறது, இது வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிப்பதன் மூலம் அதிகபட்ச நன்மையைப் பெற நிலக்கரி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும்.
கிலோ ரூ. 27.50-க்கு 'பாரத்' ஆட்டா விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது
 • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 'பாரத்' பிராண்டின் கீழ் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன் வாகனங்களைப் புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று (06-11-2023) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 
 • இதில் ஆட்டா ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கும். சாதாரண நுகர்வோரின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். 
 • 'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும். மேலும் இந்த முக்கியமான உணவுப் பொருளின் விலை குறைய உதவும்.
 • 'பாரத்' அட்டா இன்று முதல் கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் ஆகியவற்றின் அனைத்து கடைகள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். அத்துடன் பிற கூட்டுறவு, சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் இதன் விற்பனை விரிவுபடுத்தப்படும்.
சென்னையில் டாஸ்கான் 2023 - அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்
 • தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தை (டாஸ்கான் 2023) இன்று சென்னை தனியார் ஹோட்டலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 • தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் (டாஸ்கான் 2023), சென்னை தாஜ் கோரமண்டலில் 2023 நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 
 • இதில் இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து விளையாட்டு அறிவியல் தொடர்பான அறிஞர்கள் தலைமையில் சுமார் 250 பிரநிதிகள் பங்கேற்றனர்.
சையத் முஷ்தாக் அலி கோப்பை 2023 - பஞ்சாப் சாம்பியன்
 • சண்டிகரில் உள்ள மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பரோடா அணி பவுலிங் தேர்வு செய்தது. 
 • அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அன்மோல்பிரீத் சிங், 61 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். 
 • 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். நேஹல் வதேரா, 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
 • 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பரோடா அணி விரட்டியது. அபிமன்யு சிங் 61 ரன்கள், நினத் ரத்வா 47 ரன்கள், க்ருணல் பாண்டியா 45 ரன்கள், விஷ்ணு சோலங்கி 28 ரன்கள் எடுத்தனர். 
 • இருந்தும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது பரோடா. அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
 • அன்மோல்பிரீத் சிங், ஆட்ட நாயகன் விருதை வென்றார். அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார். வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel