6th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தில் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
- அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கவுன்சிலின் இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம்) ஏற்பாடு செய்துள்ள "குழந்தைகள் அறிவியல் திருவிழாவை" ஜம்முவில் இன்று (06-11-2023) திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்துப் பேசினார்.
- கண்காட்சி அரங்குகளில், மாணவர்கள் தயாரித்த பல்வேறு வகையான அறிவியல் மாதிரிகளை திரு ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்.
- பின்னர் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றிய திரு ஜிதேந்திர சிங், சிஎஸ்ஐஆரின் ஜிக்யாசா எனப்படும் இளம் அறிவியல் திறமையாளர்களை ஊக்கவிக்கும் திட்டத்தின் சிறப்புகளை விவரித்தார்.
- ஜிக்யாசா என்பது கேந்திரிய வித்யாலயா சங்கதனுடன் (கேவிஎஸ்) இணைந்து அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) செயல்படுத்தும் மாணவர் - விஞ்ஞானிகள் இணைப்பு திட்டம் என்பதை அவர் விளக்கினார்.
- பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக இதுபோன்ற தொடர்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம்-ன் முயற்சிகளை திரு ஜிதேந்திர சிங் பாராட்டினார்.
- இத்தகைய நடவடிக்கைகள் அறிவியல் திறனை அதிகரிக்கவும், இளம் உள்ளங்களின் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு உணர்வை வளர்க்கவும் உதவுகின்றன என்று அவர் கூறினார்.
- குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் திரு ஜிதேந்திர சிங் வழங்கினார்.
- இந்தக் குழந்தைகள் அறிவியல் திருவிழாவில், ஜம்மு பிராந்தியத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜம்மு காஷ்மீர் அரசின் கீழ் உள்ள சுமார் 55 பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள், ராணுவ பொதுப் பள்ளிகள், பாரதிய வித்யா மந்திர் பள்ளிகள் போன்றவற்றைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
- இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று (நவ.,6) டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின.
- முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 24.2 ஓவரில் 135 ரன்னுக்கு 4வது விக்கெட்டை இழந்தது. அடுத்து ஆல்ரவுண்டர் மாத்யூஸ் களமிறங்கினார்.கிரிக்கெட் விதிப்படி, 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- ஆனால் அவர் களத்திற்குள் வந்த உடனே ஹெல்மெட் பிரச்னை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார். இதனால் அடுத்த பந்து வீசுவது மேலும் தாமதமானது.
- இதனால் வங்கதேச வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். காலதாமதம் ஏற்படுத்தியதற்காக மாத்யூஸூக்கு நடுவர் 'அவுட்' கொடுத்தார். மாத்யூஸ் இது குறித்து நடுவர் மற்றும் வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் ஆகியோரிடம் முறையிட்டார்.
- ஆனால் இருவரும் விதிப்படி அவுட் என கூறினர். இதனால் கோபமாக வெளியேறிய மாத்யூஸ், 'ஹெல்மெட்டை' பவுண்டரி லைனுக்கு அருகில் எறிந்துவிட்டு 'டிரஸ்சிங் ரூம்' சென்றார்.
- இதன்மூலம் ஒருநாள் அரங்கில் பேட்டிங் செய்ய தாமதம் செய்ததால், 'டைம்டு அவுட்' முறையில் அவுட்டான முதல் வீரர் ஆனார் மாத்யூஸ்.
- மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாட்டை புதுதில்லியில் இன்று (06-11-2023) தொடங்கி வைத்தார்.
- 2023 நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்கள் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும்.