Type Here to Get Search Results !

4th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னையில் ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • ஜப்பானில் இருப்பதைப் போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், 'ஹெல்த் வாக்' சாலைகள் அமைக்கும் திட்டத்தைச் சென்னை பெசன்ட் நகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
  • ஜப்பானில், மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த 8 கி.மீ-க்கு ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் தினமும் 10,000 அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், அதற்கேற்றவாறு இச்சாலைகள் அமைக்கப்படுகிறது.
இந்திய அரசின் உதவியுடன் இலங்கை தொழிலாளருக்கு 10,000 வீடுகள் - ரணில் விக்ரமசிங்க, நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினர்
  • இலங்கை உள்நாட்டுப் போரின்போது உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம்வீடுகளை கட்டித்தர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வந்தது.
  • இவற்றில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டன. மேலும், தேயிலைத் தோட்டத் தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளில் 3,700 வீடுகள் கட்டித் தரப்பட்டன.
  • இலங்கையில் 2017-ல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். 
  • அப்போது, 'மலையக மக்களின் கல்வி,சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக இலங்கை அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு, இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். மலையகத் தமிழர்களுக்காக இந்திய அரசுத் தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டத்துடன், கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்' என்று மோடி அறிவித்தார்.
  • இந்நிலையில், மலையக மக்கள்தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 'நாம் 200' என்ற தலைப்பிலான மாநாடு கொழும்புவில் மாலை நடைபெற்றது.
  • இதில், கொட்டக்கலை பகுதியில் அமைந்துள்ள மவுன்ட் வெர்மன் தேயிலைத் தோட்டத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவும், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் இணைந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினர்.
  • அதிபர் மாளிகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு நடந்தது. இதில், இந்தியா-இலங்கை இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியிலான பவுத்ததொடர்புகளை பலப்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி இந்தியா சார்பாக வழங்கப்பட்டது.
  • மேலும், திரிகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையை தொடங்கிவைத்த நிர்மலா சீதாராமன், திருக்கோணஸ்வரம் சிவன்கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்தியக் கடற்படைக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையே கடல்சார் பாதுகாப்பு சந்திப்பு 2023
  • இந்தியா மற்றும் இலங்கையின் கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளின் பிரதிநிதிகளுக்கு இடையே 33வது வருடாந்திர சர்வதேச கடல் எல்லைக் கூட்டம் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பாக் நீரிணைப் பகுதியில் கோடியக்கரைக்கு அருகிலுள்ள இந்திய - இலங்கைக் கடல் எல்லைக் கோட்டில் வெள்ளியன்று நடைபெற்றது. 
  • இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் தலைமைக் குழுக்களுக்கு இடையேயான தொடர்பையும் உறவுகளையும் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.
  • இலங்கைக் கடற்படையின் வடமத்திய கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் பி.ஏ கே.எஸ் பனகொட தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரி ரவி குமார் திங்ரா தலைமையிலான இந்திய தூதுக்குழுவினர், கடலோரக் காவல்படை பிராந்திய தலைமையகத்தின் (கிழக்கு) பிரதிநிதி, கொழும்பில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
  • இந்தச் சந்திப்பின் போது பாக் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, மீனவர்களின் பாதுகாப்பு, தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் விவாதித்தனர். 
  • தற்போதுள்ள தகவல் தொடர்பு வலையமைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் இரு கடற்படைகள் மற்றும் கடலோரக் காவல்படை இடையே சரியான நேரத்தில் தகவல்களைப் பகிர்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
  • நடவடிக்கைகளில் பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel