3rd NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக உணவு இந்தியா 2023 கண்காட்சியைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
- புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டாவது 'உலக உணவு இந்தியா 2023' என்ற மாபெரும் உணவு கண்காட்சித் திருவிழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-11-2023) தொடங்கி வைத்தார்.
- சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பகட்ட மூலதன உதவிகளையும் அவர் வழங்கினார். விழாவில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- இந்தியாவை 'உலகின் உணவுக் கூடை'' என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் இந்த நிகழ்ச்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையின் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் வலிமையை வெளிப்படுத்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
- உணவுப் பதப்படுத்தும் தொழிலின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட 48 அமர்வுகளுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நிதி அதிகாரமளித்தல், தர உத்தரவாதம், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறும்.
- இந்த நிகழ்ச்சியில் முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உட்பட 80-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
- இது 80க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 1200 க்கும் அதிகமானோர் பங்கேற்கும் விற்பனையாளர் சந்திப்பையும் கொண்டிருக்கும். இதில் நெதர்லாந்து கூட்டு செயல்பாட்டு நாடாக உள்ளது. ஜப்பான் இந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தும் நாடாக உள்ளது.
- நிலக்கரி அமைச்சகம் 2023 அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவாக 78.65 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 66.32 மில்லியன் டன் என்பதை விட 18.59% அதிகரித்துள்ளது.
- கோல் இந்தியா நிறுவன (சிஐஎல்) உற்பத்தி இந்த ஆண்டு அக்டோபரில் 61.07 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது, இது 2022 அக்டோபரில் 52.94 மில்லியன் டன்னாக இருந்தது.
- ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி (அக்டோபர் 2023 வரை) 2022-23 நிதியாண்டில் 448.49 மில்லியன் டன்னிலிருந்து 2023-24 நிதியாண்டில் 507.02 மில்லியன் டன்னாக கணிசமாக அதிகரித்து, 13.05 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
- கூடுதலாக, நிலக்கரி அனுப்புதல் 2023 அக்டோபரில் குறிப்பிடத்தக்க ஊக்கத்துடன், 79.30 மில்லியன் டன்னை எட்டியது, இது 2022 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட 67.13 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 18.14% வளர்ச்சி விகிதத்துடன் சிறந்த முன்னேற்றத்தைக் காட்டியது.
- கோல் இந்தியா நிறுவனம் (சி.ஐ.எல்) அனுப்புதல் அளவு 2022 அக்டோபரில் 53.69 மில்லியன் டன் என்பதுடன் ஒப்பிடும்போது, 2023 அக்டோபரில் 61.65 மில்லியன் டன்னை எட்டியது, இது 14.83% வளர்ச்சியைக் குறிக்கிறது.
- 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11.98% வளர்ச்சியுடன் 483.78 மில்லியன் டன்னாக இருந்த ஒட்டுமொத்த நிலக்கரி அனுப்புதல் (அக்டோபர் 2023 வரை) 23-24 நிதியாண்டில் 541.73 மில்லியன் டன்னாக கணிசமாக உயர்ந்துள்ளது.
- நிலக்கரி உற்பத்தி, அனுப்புதல் என இரண்டிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு நாட்டின் முன்னேறி வரும் எரிசக்தி தன்னிறைவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரவிருக்கும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
- தொடர்ச்சியான நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதில் நிலக்கரி அமைச்சகம் உறுதியாக உள்ளது, இதன் மூலம் நாட்டின் தற்போதைய வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் நம்பகமான எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்கிறது.