Type Here to Get Search Results !

2nd NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


2nd NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் - முதல்வர் வெளியீடு
  • தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (2.11.2023) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூக (Tamil Nadu Digital Transformation Strategy - DiTN) ஆவணத்தை வெளியிட்டார்.
  • இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை நிர்வாக அலுவலர் பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா உற்பத்திக் கண்காட்சியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் தொடங்கி வைத்தார்
  • கர்நாடகாவின் பெங்களூரில் மூன்று நாள் 'இந்தியா உற்பத்தி கண்காட்சியை' பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023, நவம்பர் 02 அன்று தொடங்கி வைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியை லகு உத்யோக் பாரதி & ஐஎம்எஸ் அறக்கட்டளை, பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 'இந்தியாவில் உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி' என்பது இந்தக் கண்காட்சியின் மையப்பொருளாகும். 
  • ஆறாவது 'இந்தியா உற்பத்தி கண்காட்சி' விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பொறியியல், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், ட்ரோன்கள் போன்ற பல்வேறு துறைகளில் தங்கள் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உபகரணங்கள் ஆகியவற்றைப் பங்கேற்பாளர்களுக்குக் காட்சிப்படுத்தும் தளத்தையும் வணிக மற்றும் அறிவுப் பகிர்வு வாய்ப்புகளையும் வழங்கும். சிறந்த சிந்தனைகள், சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆரில்) தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானத் தளங்களில் தூசியைக் கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 'தூசி மற்றும் கட்டுப்பாட்டு மேலாண்மை மையத்தை' அமைத்துள்ளது
  • தில்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் தூசிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்துவதைக் கண்காணிக்க, காற்றின் தரக் குறியீட்டை மேம்படுத்துவதற்காகக் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 'தூசி மற்றும் கட்டுப்பாட்டு மேலாண்மை மையத்தை' அமைத்துள்ளது.
  • காற்றின் தரம் மற்றும் தூசி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தேசிய நெடுஞ்சாலை கட்டுமான தளங்களில் தற்போதுள்ள தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யுமாறும், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் / மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதன் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தியுள்ளது.
  • கட்டுமான தளங்களில் எடுக்கப்பட வேண்டிய தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முடிக்கப்பட்ட திட்டங்களில் துடைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், அனைத்துக் கட்டுமான தளங்களிலும் நாள் முழுவதும் தண்ணீர் தெளித்தல், கட்டுமானம் மற்றும் இடிப்புப் பொருட்களை பச்சை வலை அல்லது துணியால் மூடுதல் ஆகியவை அடங்கும்.  
  • இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பிராந்தியத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கட்டுமான தளங்களில் தூசி கட்டுப்பாட்டை அதிகரிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்கிறது.
நிலக்கரித் துறை, செப்டம்பர் மாதத்தில் 16.1% வளர்ச்சியை எட்டியுள்ளது
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023 செப்டம்பர் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி, நிலக்கரித் துறையின் குறியீட்டெண் 16.1% வளர்ச்சியுடன் 148.1 புள்ளிகளை எட்டியுள்ளது. இது ஆகஸ்ட் 2023 தவிர கடந்த 14 மாதங்களில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும்.
  • சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை இந்தக் குறியீடு அளவிடுகிறது.
  • 2023 செப்டம்பரில் நிலக்கரி உற்பத்தி 67.27 மில்லியன் டன்னை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 58.04 மில்லியன் டன் என்ற அளவை விட அதிகமாகும். 
  • அதாவது, 15.91% அதிகரிப்பைக் குறிக்கிறது. நிலக்கரித் தொழில் துறை ஏப்ரல் 2023-ல் 9.1% வளர்ச்சியைப் பதிவு செய்தது, இது செப்டம்பர் 2023-ல் 16.1% ஆக உயர்ந்தது.
  • நிலக்கரித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, எட்டு முக்கியத் தொழில்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அதன் பங்களிப்பு ஆகியவை நிலக்கரி அமைச்சகத்தின் தொடர்ச்சியான முன்முயற்சிகளுக்கு சான்றாகும். 
  • இந்த முயற்சிகள் "தற்சார்பு இந்தியா" என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து, தன்னிறைவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை நோக்கிய தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கின்றன.
இந்தோ - ஜெர்மனி இளம் தலைவர்கள் மாநாடு 2023
  • கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி, அப்போதைய ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் ஆகியோரால் இந்தோ-ஜெர்மனி இளம் தலைவர்கள் கூட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கிடையே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதும், புவிசார் அரசியல் தொடர்புகளை வலுப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.
  • இக்கூட்டமைப்பின் முக்கிய செயல்பாடாக ஜெர்மனி மற்றும் இந்திய இளம் தலைவர்களை கண்டறிந்து, வணிகம், அரசியல், அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கலாச்சார செயல் பாடுகள் தொடர்பாக ஆண்டுக்கு ஒருமுறை இளம் தலைவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.
  • ஒரு வருடம் ஜெர்மனியிலும் அடுத்த வருடம் இந்தியாவிலும் என இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்குபெற தலைமைப் பண்புடன் சிறப்பாக செயல்பட்டு வரும் 20 இந்திய இளம் தலைவர்கள் மற்றும் 20 ஜெர்மனிய இளம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டுக்கு அழைக்கப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel