Type Here to Get Search Results !

29th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்திய பொறியியல்  துறை ஏற்றுமதி அக்டோபரில் ஏறுமுகம்
  • 18 முக்கிய சந்தைகளுக்கான இந்திய பொறியியல்  துறையின் ஏற்றுமதி, நடப்பாண்டு அக்டோபரில் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக, இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு (இஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவுக்கான பொறியியல் துறை ஏற்றுமதி, கடந்த ஆண்டு அக்டோபரில் 1361 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 2.2 சதவிகிதம் உயர்ந்து, 1391.5 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
  • ஜெர்மனிக்கான பொறியியல் ஏற்றுமதி, அக்டோபரில் 20 சதவிகிதம் உயர்ந்து 342.7 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பொறியியல் ஏற்றுமதி,  2.9 சதவிகிதம் உயர்ந்து 348.6 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.  
  • இந்தியாவின் ஒட்டுமொத்த பொறியியல் ஏற்றுமதி, கடந்த ஆண்டு அக்டோபரில் 7550.69 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 7.2 சதவிகிதம் உயர்ந்து, நடப்பாண்டு அக்டோபரில் 8094.20 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.  
  • அதே வேளையில், ஒட்டுமொத்த பொறியியல் ஏற்றுமதி கடந்த ஆண்டு  ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 62.63 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், நடப்பாண்டு அதே காலகட்டத்தில், 1.61 சதவிகிதம் குறைந்து  61.63 பில்லியன் டாலர்களாக சரிவை சந்தித்துள்ளது.   
  • வளர்ந்த நாடுகளில், அதிலும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், உலோகத் துறையில் தேவை சரிந்துள்ளதாகவும்,  அவர் தெரிவித்துள்ளார்.
  • அக்டோபரில், நாட்டின் மொத்த வணிக ஏற்றுமதியில், இந்திய பொறியியல் துறையின் பங்கு 24.11 சதவிகிதம் என்று இஇபிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ. 24,104 கோடி மதிப்பிலான (மத்திய அரசின் பங்கு: ரூ.15,336 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு: ரூ. 8,768 கோடி) குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 10.45 கோடி பழங்குடியினர் உள்ளனர், இதில் 18 மாநிலங்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 75 சமூகங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். 16-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், 2026, ஏப்ரல் 1 முதல் ஐந்து (5) ஆண்டு காலத்திற்கு பொருந்தும்.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் 280(1) பிரிவின்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரிகளின் நிகர வருவாயைப் பகிர்ந்தளிப்பது, அந்த வருவாயில் அந்தந்த மாநிலங்களுக்கு இடையே பங்கீடு செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய நிதிக் குழுவை அமைப்பதற்கான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • பதினைந்தாவது நிதிக்குழு 2017, நவம்பர் 27 அன்று அமைக்கப்பட்டது. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2025-26 நிதியாண்டு வரை செல்லுபடியாகும்.
5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்கள் - மத்திய அமைச்சரவை முடிவு
  • பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 81.35 கோடி பயனாளிகளுக்கு 2024-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முடிவு செய்துள்ளது.
  • இது 81.35 கோடி நபர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக விளங்கும் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தில், 5 ஆண்டு காலத்திற்கு ரூ.11.80 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும்.
விரைவு சிறப்பு நீதிமன்றங்களுக்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 01.04.2023-ம் ஆண்டு முதல் 31.03.2026 வரை ரூ.1952.23 கோடி (மத்திய அரசின் பங்காக ரூ.1207.24 கோடி மற்றும் மாநில அரசின் பங்காக ரூ.744.99 கோடி) மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாக விரைவு சிறப்பு நீதிமன்றத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • நிர்பயா நிதியில் இருந்து மத்திய அரசின் பங்கு வழங்கப்பட உள்ளது.
  • தற்போது, நிர்பயா நிதியில் இருந்து மத்திய அரசின் பங்களிப்புடன், 1952.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இத்திட்டம் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2024-25-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை ரூ.1261 கோடி மதிப்பீட்டில் ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இது 2023-24-ம் ஆண்டு முதல் 2025-2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
13வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி - பஞ்சாப் அணி 4-வது முறையாக சாம்பியன்
  • ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது. 
  • இதில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
  • இதைத் தொடர்ந்து வெற்றி யாளரை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3-வது இடம் பிடித்த தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
  • இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹரியாணா - பஞ்சாப் அணிகள் மோதின. நிர்ணயிக்கப் பட்ட 60 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. இதில் பஞ்சாப் அணி 9-8 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 
  • தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் அந்த அணி பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். பட்டம் வென்ற அந்த அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற ஹரியாணா வெள்ளிப் பதக்கம் பெற்றது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel