Type Here to Get Search Results !

28th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


28th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் - 47 வருடங்களுக்குப் பிறகு பட்டம் வென்றது இத்தாலி
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி ஸ்பெயினில் உள்ள மலாகா நகரில் நடைபெற்றது. பட்டம் வெல்வதற்கான இந்த ஆட்டத்தில் இத்தாலி - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 
  • முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரினை எதிர்த்து விளையாடினார். இதில் மேட்டியோ அர்னால்டி 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.
  • 2-வது ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர்,ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜன்னிக் ஷின்னர் 6-3, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த மோதலில் 2-0 என வெற்றி பெற்ற இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது. டேவிஸ் கோப்பை தொடரில் இத்தாலி 47 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பட்டம் வென்றுள்ளது.
  • கடைசியாக இத்தாலி 1976-ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தது. இதற்கு முன்னர் 3 முறையும், 1976-ம் ஆண்டுக்கு பின்னர் 3 முறையும் இத்தாலி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. இதில் 3 முறை ஆஸ்திரேலியாவிடமே இத்தாலி தோல்வி கண்டிருந்தது.
'இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில்' சிறப்பாக செயல்பட்டதற்காக ஆயுஷ் அமைச்சகம் தங்கப்பதக்கம் பெற்றது
  • 'இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி'யின் 'அமைச்சகம் மற்றும் துறை' பிரிவில் சிறந்த செயல்பாட்டிற்காக ஆயுஷ் அமைச்சகத்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மொத்தம் 18 புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை ஆயுஷ் அரங்கில் காட்சிப்படுத்தின.
  • ஆயுஷ் உணவுமுறை, புதுமையான ஆயுஷ் தயாரிப்புகள், யோகா தெரபி வகுப்புகள், மனோபாவம் மற்றும் இயற்கை சோதனை, மருத்துவ ஆலோசனை, படைப்பாற்றல் விளையாட்டுகள், கற்றல் ஆகியவை முக்கிய கவனத்தை ஈர்த்தன.
  • ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா-இயற்கை மருத்துவம், சோவா-ரிக்பா முறைகள் குறித்து பார்வையாளர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.
  • ஆயுஷ் அரங்கில், ஆயுஷ் துறையில் இளைஞர்களுக்கு தொழில் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
  • இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் 'அமைச்சகங்கள் மற்றும் துறைகள்' பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆயுஷ் அமைச்சகத்திற்கு 'இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு' தங்கப் பதக்கம் வழங்கியுள்ளது.
  • ஆயுஷ்-தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக, மொத்தம் 18 ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்தால் புதிய தயாரிப்புகளுடன் அரங்கில் காட்சிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
15 பி திட்டத்தின் கீழ் ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் 12706 (இம்பால்) சேவையை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்
  • 15 பி நான்கு திட்டத்தில் 3-வது திட்டமான ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் 12706 இம்பால் சேவையை 2023, நவம்பர் 28, அன்று புதுதில்லியில் மணிப்பூர் முதலமைச்சர் திரு என் பைரேன் சிங் முன்னிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். 
  • காங்லா அரண்மனை, 'காங்லா-சா' ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இம்பாலைத் தொடங்கிவைப்பது இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்காக தியாகம் செய்த மணிப்பூர் மக்களுக்குச் செய்யும் உரிய மரியாதையாகும். 
  • முகடு வடிவமைப்பு இடதுபுறத்தில் காங்லா அரண்மனையையும், வலதுபுறத்தில் 'காங்லா-சா'-வையும் சித்தரிக்கிறது. காங்லா அரண்மனை மணிப்பூரின் ஒரு முக்கியமான வரலாற்று, தொல்லியல் தளமாகும். 
  • டிராகன் தலை மற்றும் சிங்கத்தின் உடலுடன், 'காங்லா-சா' மணிப்பூர் வரலாற்றில் ஒரு புராண உயிரினமாகும். மேலும் இது அதன் மக்களின் பாதுகாவலராக அடையாளப்படுத்தப்படுகிறது. 'காங்லா-சா' மணிப்பூரின் மாநிலச் சின்னமாகும்.
இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையத்தின் தரவு சேகரிப்பு மற்றும் புள்ளிவிவரங்களுக்கான 19 வது செயற்குழு கூட்டம்
  • மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையத்தின் தரவு சேகரிப்பு மற்றும் புள்ளிவிவரத்திற்கான 19-வது செயற்குழுவை 2023 நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை நடத்துகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் இந்தக் கூட்டம் தொடங்கியது.
  • இது உலகெங்கிலும் உள்ள சூரை மீன்வளத் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியமான கூட்டமாகும். 
  • இக்கூட்டத்தில் மத்திய அரசின் மீன்வளத் துறை இணைச் செயலாளர் திருமதி நீது குமாரி பிரசாத், மகாராஷ்டிர அரசின் மீன்வளத் துறை ஆணையர் திரு அதுல் பட்னே ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • இந்தோனேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகள், சீஷெல்ஸ், தான்சானியா, ஈரான், தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, ஓமன், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்கின்றனர். 
  • இது தவிர, பல்வேறு நாடுகள், ஐ.ஓ.டி.சி மற்றும் அறிவியல் அமைப்புகளைச் சேர்ந்த பல பங்கேற்பாளர்கள் மெய்நிகர் பயன்முறையிலும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
  • இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து 2023 டிசம்பர் 4 முதல் 8 வரை இதே இடத்தில் நடைபெறும் ஐ.ஓ.டி.சி.யின் முக்கிய அறிவியல் குழுக் கூட்டம், இந்தியப் பெருங்கடலில் உள்ள சூரை மீன் மற்றும் சூரை போன்ற உயிரினங்களின் நிலையான மேலாண்மை தொடர்பான அறிவியல் பரிந்துரைகளுக்காக டபிள்யூ.பி.டி.சி.எஸ் மற்றும் பல்வேறு பணிக்குழுக்களின் பரிந்துரைகளை பரிசீலிக்கும்.
  • சூரை மீன்கள், ஷீலா மீன்கள், சுறா மீன்கள், திருக்கை மீன்கள் போன்ற பிற பெரிய மீன் இனங்கள் மகத்தான பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. சூரை மீன்கள் மட்டும் ஆண்டுக்கு 41 பில்லியன் அமெரிக்க டாலர் (2018 ஆம் ஆண்டில்) வர்த்தகத்திற்கு பங்களிக்கின்றன. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel