27th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சுகாதார மையங்களின் பெயர் ஆரோக்கிய மந்திர் மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு
- ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்க கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- முன்னதாக மத்திய அரசு, ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், ‘ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.
- இந்நிலையில், இந்த மையங்களின் பெயரை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றத்தை அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
- பெயர் மாற்றப்பட்ட மையங்களின் புகைப்படத்தை, ‘ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
- முதல் கேலோ இந்தியா பாரா கேம்ஸ் 2023 லோகோ மற்றும் சின்னமான உஜ்வாலாவை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும் பல சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பாரா தடகள வீரர்கள் புதுதில்லியில் தொடங்கி வைத்தனர்.
- 'உஜ்வாலா' என்ற சிட்டுக்குருவி, கேலோ இந்தியா - பாரா கேம்ஸ் 2023 இன் அதிகாரப்பூர்வ சின்னமாக வெளியிடப்பட்டது. குட்டி சிட்டுக்குருவி டெல்லியின் பெருமையின் அடையாளமாகும்.
- மேலும் அதன் தனித்துவம் உறுதியையும் பச்சாத்தாபத்தையும் சித்தரிக்கிறது. கேலோ இந்தியா - பாரா கேம்ஸ் 2023 இன் சின்னமாக உஜ்வாலா, வலிமை பல வடிவங்களில் வருகிறது மற்றும் மனித ஆன்மா உடைக்க முடியாதது என்பதை நினைவூட்டுகிறது.
- சுதந்திர இந்தியாவில் 1989-90 காலக்கட்டத்தில் பிரதமராக பதவி வகித்தவர் வி.பி.சிங். கடந்த 2008-ம் ஆண்டு இவர் மரமடைந்தார். தான் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் காவிரி நதிநீர் தீப்பாயம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்தது, உள்ளிட்ட பல வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை கொடுத்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழகத்தின் சார்பில் சென்னை மாநில கல்லூரியில் வி.பி.சிங் திருவுருவ 52 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. வி.பி.சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த சிலை திறக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் வி.பி.சிங் திருவுருவ சிலையை திறந்து வைத்தனர். 600 கிலோ எடை, சுமார் 8.5 அடி உயர பீடத்தில், 9.5 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள கல்வெட்டில் வி.பி.சிங்கின் கருத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.