Type Here to Get Search Results !

24th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


24th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கால்நடை தீவன தொழிற்சாலைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
 • கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் தீவனம் தயாரிக்கும் ஆலை நிறுவப்படவுள்ளது.
 • கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலை ரூ.33.00 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் நபார்டு திட்ட கடனுதவியுடன் நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.33.00 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கடனுதவியுடன் நிறுவுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு 24.11.2023 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
 • கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஒன்றியங்கள் மற்றும் பிற ஒன்றியங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு உகந்த தரமான கால்நடைத் தீவனம் வழங்குவதும், மாவட்ட ஒன்றியங்களுக்கு தடையின்றி சமச்சீர் கால்நடை தீவனம் வழங்கப்படுவதை உறுதி செய்வதும், தரமான கால்நடை தீவனம் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் ஆற்றல் திறன் பசுமை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்பன் மாசைக் குறைக்க செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
To Know More About - Duolingo promo codes

பஞ்சாப் மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்க்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
 • பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
 • இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து, ‘கடந்த ஜூன் 19, 20 மற்றும் அக்.20-ஆகிய தேதிகளில் நடைபெற்ற பஞ்சாப் பேரவை அமா்வுகளின் செல்லுபடி குறித்து சந்தேகம் எழுப்ப ஆளுநருக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று நவம்பா் 10-ஆம் தேதி உத்தரவிட்டது.
 • இதன் 27 பக்கங்கள் கொண்ட விரிவான உத்தரவு உச்சநீதிமன்ற இணையதளத்தில் வியாழக்கிழமை இரவு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், ‘பேரவை நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பும் எந்த முயற்சியும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஆகும். 
 • பேரவை சிறப்புரிமைகளின் பாதுகாவலராக அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பேரவைத் தலைவா், பேரவையை ஒத்திவைப்பதில் அவரது அதிகார வரம்புக்குள் சிறப்பாகச் செயல்பட்டாா்.
 • மாநில மக்களால் தோ்ந்தெடுக்கப்படாத காப்பாண்மைத் தலைவராக ஆளுநருக்கு சில அரசமைப்பு அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், மாநில சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை நசுக்க ஆளுநா் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
17-வது இந்திய - நேபாள கூட்டு ராணுவப் பயிற்சி சூரிய கிரண் பித்தோராகரில் தொடங்கியது
 • சூர்ய கிரண் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக 334 பேர் கொண்ட நேபாள ராணுவக் குழு இந்தியா வந்தது. உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை இந்த ஒத்திகைப் பயிற்சி நடைபெற உள்ளது. இது ஒரு வருடாந்திர நிகழ்வாகும், இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படுகிறது.
 • 354 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் பிரிவு குமாவுன் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு பட்டாலியன் தலைமையில் செயல்படுகிறது. நேபாள ராணுவப் பிரிவை தாரா தால் பட்டாலியன் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
 • காடுகளில் போர், மலைப்பிரதேசங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
 • ட்ரோன்களைப் பயன்படுத்துதல் மற்றும் ட்ரோன் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவப் பயிற்சி, விமான அம்சங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும்.
 • இந்த நடவடிக்கைகளின் மூலம், துருப்புக்கள் தங்கள் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவார்கள். அவர்களின் போர்த் திறன்களை மேம்படுத்துவார்கள் மற்றும் சவாலான சூழ்நிலைகளில் அவர்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவார்கள்.
 • இந்தப் பயிற்சி, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு யோசனைகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு தளத்தை வழங்குகிறது. 
 • சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் செயல்பாட்டு நடைமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்க்கவும் இது உதவும்.
 • சூரிய கிரண் பயிற்சி என்பது இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே நிலவும் நட்பு, நம்பிக்கை, பொதுவான கலாச்சார இணைப்புகளின் வலுவான பிணைப்பைக் குறிக்கிறது. 
 • இது பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்கி இரு நாடுகளின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இரு நட்பு நாடுகளுக்கு இடையே பகிரப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களை அடைவதையும் இருதரப்பு உறவுகளை வளர்ப்பதையும் இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமி மற்றும் தேசிய நேரடி வரிகள் அகாடமி இடையே வளங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமி மற்றும் தேசிய நேரடி வரிகள் அகாடமி இடையே சிறந்த நடைமுறைகள், புதுமையான தொழில்நுட்பங்கள் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (24.11.2023) கையெழுத்தானது.
 • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நேரடி வரிகள் அகாடமி முதன்மைத் தலைமை இயக்குநர் திரு ஜெயந்த் திதி மற்றும் தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமி தலைமை இயக்குநர் திரு கே.என்.ராகவன் கையெழுத்திட்டனர்.
 • வரிவிதிப்பு, சட்ட நடைமுறைகள், வணிக நடைமுறை சட்டங்கள், பொருளாதார மற்றும் நிர்வாகச் சட்டம், தரவு பகுப்பாய்வு, இடர் மேலாண்மை போன்றவற்றில் அறிவுப் பகிர்வு, வளங்கள் பகிர்வு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கூட்டு ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel