22nd NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் - 26வது முறையாக பங்கஜ் அத்வானி சாம்பியன்
- ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் கத்தார் நாட்டில் தலைநகரான தோஹாவில் நடைபெற்றது.
- இதன் இறுதிப்போட்டியில இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சகநாட்டைச் சேர்ந்த சவுரவ் கோத்தாரியை எதிர்த்து விளையாடினார். இதில் பங்கஜ் அத்வானி 1000-416 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கஜ் அத்வானி பட்டம் வெல்வது இது 26-வது முறையாகும்.
- ஆசியான் நாடுகளுக்கான இந்தியத் தூதரகம், வேளாண்மை, மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து ஆசியான்-இந்தியா சிறுதானியத் திருவிழா 2023ஐ இந்தோனேசியாவில் நவம்பர் 22 முதல் 26 வரை நடத்துகிறது.
- இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள முக்கிய பெரும் வணிக வளாகமான கோட்டா கசாபிளாங்கா-வில் திருவிழாவின் தொடக்க அமர்வு நடைபெற்றது.
- திருவிழாவின் ஒரு பகுதியாக சிறுதானியங்களை மையமாகக் கொண்ட கண்காட்சி நடத்தப்படுகிறது, இதில் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்கள், இந்திய சமையல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
- ஆசியான் உறுப்பு நாடுகளான புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் சிறுதானியங்கள், அது சார்ந்த பொருட்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சந்தையை உருவாக்குவதும் இத்திருவிழாவின் நோக்கமாகும்.
- இந்தத் திருவிழாவின் போது, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இந்தியாவில் இருந்து ஒரு தூதுக்குழுவை வழிநடத்துகிறது, இது சமையல்கலைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள், மாநில அதிகாரிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இந்திய சிறுதானிய சுற்றுச்சூழல் அமைப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழில் வல்லுநர்களாப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
- நவம்பர் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நேரடி சமையல் பட்டறையில், இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர்கள் சிறுதானியங்களின் சமையல் திறனை வெளிப்படுத்துவார்கள்.
- இந்தியா கடற்படையின் உள்நாட்டு தயாரிப்பில் வடிவமைக்கப்பட்ட இம்பால் போர்க்கப்பல் (யார்டு 12706) - ஏவுகணை அழிப்பான் தனது முதல் பிரமோஸ் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
- இந்திய கடற்படையின் கூற்றுப்படி, போர்க்கப்பல் மூலம் நீண்ட தூரம் பயணம் செய்து இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை இதுவாகும் என்றும், இது போர் தயார்நிலையில் கடற்படையின் அசைக்க முடியாத கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 'ஆத்மனிபர்தா' மற்றும் கடலில் இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மற்றொரு மைல்கல்லாக உள்ளது என கூறப்படுகிறது.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹெபத்பூரில் நேற்று நடைபெற்ற 2023 உலகளாவிய மீன்வள மாநாட்டை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்து பேசினார்.
- குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது மாநிலத்திற்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். இன்று 'கோல்' வகை மீன்களை மாநில மீனாக அறிவிக்கிறோம். கோல் மீன் குஜராத் ஏற்றுமதி செய்யும் விலை உயர்ந்த மீன்வகைகளில் ஒன்றாகும். இதனை மாநில மீனாக அறிவிப்பதால் கோல் வகை மீன்களை பற்றிய விழிப்புணர்வு உண்டாகும்.
- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகளின் 'புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி' என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 22, 2023) தொடங்கி வைத்தார்.
- இந்த இயக்கத்தின் மூலம் சிறந்த சமூகத்தைக் கட்டமைக்க மாணவர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.