Type Here to Get Search Results !

21st NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


21st NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பதம்பஹார் ரயில் நிலையத்தில் மூன்று ரயில்களைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
  • ஒடிசா மாநிலம், பதம்பஹார் ரயில் நிலையத்திலிருந்து பதம்பஹார் - டாடாநகர் மெமு உள்பட மூன்று புதிய ரயில்களைக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 
  • புதிய ரைரங்பூர் அஞ்சல் பிரிவையும் அவர் மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார்; ரைரங்பூர் அஞ்சல் கோட்டத்தின் நினைவு சிறப்பு உறை வெளியிடப்பட்டது; இந்த நிகழ்வில் பதம்பஹார் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார். 
பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் கவுரவித்தார்
  • இந்தியாவின் திரைப்பட பின்னணி பாடகியாக வலம் வரும் மெல்லிசை அரசி பி. சுசீலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல மொழிகளில் 40 ஆண்டுகளாக 25,000 மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளனர்.
  • ஆந்திராவைச் சேர்ந்த இவரை கவுவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
  • மேலும் இந்த விழாவில் நீடாமங்கலத்தைச் சேர்ந்த இசையியல் அறிஞர் பி.எம். சுந்தரத்திற்கும் டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
பசுமை ஆப்பிள் விருதுகள் 2023-ல் தங்கத்தை வென்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
  • இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நவம்பர் 20ம் தேதி பசுமை அமைப்பின் சார்பில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை ஆப்பிள் விருதுகள் 2023 அறிவிக்கப்பட்டன. 
  • இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு விருது கிடைத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை ஆப்பிள் விருதுகள் 2023-ல் தங்கத்தை வென்றுள்ளது.
14வது இந்திய அமெரிக்கக் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி "வஜ்ரா பிரஹார் 2023" 
  • 14-வது இந்திய-அமெரிக்கக் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி "வஜ்ரா பிரஹார் 2023" உம்ரோயில் உள்ள கூட்டுப் பயிற்சி மையத்தில் தொடங்கியது. 
  • அமெரிக்க படைப்பிரிவுக்கு, அமெரிக்க சிறப்புப் படைகளின் 1-வது சிறப்புப் படைக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்திய ராணுவப் பிரிவுக்கு கிழக்கு கமாண்டைச் சேர்ந்த சிறப்புப் படை வீரர்கள் தலைமை தாங்குகின்றனர்.
  • வஜ்ரா பிரஹார் பயிற்சி என்பது இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவ சிறப்புப் படைகள் இணைந்து நடத்தும் கூட்டுப் பயிற்சியாகும். கூட்டுப் பணி திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு உத்திகள் போன்ற பகுதிகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதல் பயிற்சி இந்தியாவில் 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்திய-அமெரிக்கக் கூட்டு சிறப்புப் படைகளின் 13 வது பயிற்சி பக்லோவில் உள்ள சிறப்புப் படைகள் பயிற்சி பள்ளியில் நடத்தப்பட்டது. தற்போதைய பதிப்பு மேகாலயாவின் உம்ராய் கன்டோன்மென்டில் 2023 நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை நடத்தப்படுகிறது.
  • அடுத்த மூன்று வாரங்களில், மலைப்பாங்கான நிலப்பரப்பில் வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் சிறப்பு நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், வான்வழி நடவடிக்கைகள் ஆகியவற்றை இரு தரப்பினரும் கூட்டாகத் திட்டமிட்டு ஒத்திகை செய்வார்கள்.
  • வஜ்ர பிரஹார் பயிற்சி இரு நாடுகளின் சிறப்புப் படைகளுக்கு இடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு முறையாக உருவெடுத்துள்ளது. 
  • இது இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவங்களுக்கு இடையிலான பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாகும்.
ஆா்ஜென்டீனா அதிபராகிறாா் ஜேவியா் மிலேய்
  • ஆா்ஜென்டீனாவின் புதிய அதிபராக வலதுசாரி சிந்தனையாளரும், பொருளாதார நிபுணருமான ஜேவியா் மிலேய் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
  • அந்த நாட்டின் அதிபா் தோதல் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்றது. எனினும், இந்தத் தோதலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
  • அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றுத் தோதல் நடைபெற்றது. இதில் ஜேவியா் மேலேய்க்கு 55.69 சதவீத வாக்குகள் பதிவாகின. அதையடுத்து, நாட்டின் அடுத்த அதிபராக அவா் பொறுப்பேற்கவிருக்கிறாா்.
ஏடிபி பைனல்ஸ் தொடரில் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
  • டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொண்ட ஏடிபிபைனல்ஸ் தொடர் இத்தாலியில் உள்ள துரின்நகரில் நடைபெற்று வந்தது. 
  • இதன் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னருடன் மோதினார். 
  • ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.
  • ஏடிபி பைனல்ஸ் தொடரில் ஜோகோவிச் பட்டம் வெல்வது இது 7-வது முறையாகும். இதன் மூலம் இந்த தொடரில் 6 பட்டங்கள் வென்றிருந்த முன்னாள் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச். 
  • 36 வயதான ஜோகோவிச், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பட்டம் வென்றார்.
  • உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக ஜோகோவிச் ஆண்டை நிறைவு செய்வது இது 8-வது முறையாகும். 400 வாரங்கள் டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி உள்ளார். 
  • இதன் மூலம் டென்னிஸ் வரலாற்றில் 400 வாரங்கள் முதல் இடத்தில் இருந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர், படைத்துள்ளார். இந்த வகையில் இதற்கு முன்னர் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 310 வாரங்களில் முதலிடத்தில் இருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel