16th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விவசாயிகளுக்கு 15-வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி விடுவிப்பு, பழங்குடியினருக்கு ரூ.24,000 கோடி திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கினார்
- பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது பிறந்த நாள் (நவம்பர் 15-ம் தேதி) 'ஜன்ஜதியா கவுரவ் திவஸ்' (பழங்குடியினர் பெருமை தினம்) என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என மத்திய அரசு கடந்த 2021-ல்அறிவித்தது. நவ. 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் தொடங்கப்பட்ட நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
- இந்நிலையில், 3-வது பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டு பிர்சா முண்டாவின் சொந்த ஊரான உலிஹட்டுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
- இதன்மூலம் பிர்சா முண்டாவின் சொந்த ஊருக்கு நேரில் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது. பின்னர், பிர்சா முண்டா சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- பின்னர், விக்சிட் பாரத் சங்கல்ப் யாத்திரை மற்றும் பிரதமரின் பின்தங்கிய பழங்குடியின குழுக்கள் மேம்பாட்டு திட்டத்தை (பிவிடிஜி) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் கீழ் பழங்குடியினர் பகுதிகளில் சாலை, தொலைத்தொடர்பு, மின்சாரம், குடியிருப்பு, தூய்மையான குடிநீர், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படும்.
- இதன்மூலம் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 22,544 கிராமங்களில் வசிக்கும் சுமார் 28 லட்சம் பழங்குடியினர் பயன்பெறுவர்.
- இதுதவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலை, ரயில், கல்வி, நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட துறைகளில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- இதில் சில திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் நாடு முழுவதும் உள்ள 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 15-வது தவணைத் தொகையாக ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்.
- “இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கடற்படையின் கப்பல்கள் கினியா வளைகுடாவில் கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இது மேற்கொள்ளப்பட்டது.
- பிரஸ்ஸல்ஸில் 2023 அக்டோபர் 5 அன்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா கடல்சார் பாதுகாப்பு உரையாடலின் மூன்றாவது கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. அதன்படி, கினியா வளைகுடாவில் அக்டோபர் 24 அன்று இந்த கூட்டு கடற்படை பயிற்சி தொடங்கியது.
- பயிற்சியின் போது, இந்திய கடற்படையின் கடலோர ரோந்து கப்பல் ஐ.என்.எஸ் சுமேதா, கினியா வளைகுடாவில் மூன்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கப்பல்களுடன் இணைந்து பணியாற்றியது.
- அதாவது இத்தாலிய கடற்படை கப்பல் ஐ.டி.எஸ் ஃபோஸ்காரி, பிரான்ஸ் கடற்படை கப்பலான எஃப்.எஸ் வென்டோஸ் மற்றும் ஸ்பெயின் கடற்படை கப்பல் டோர்னாடோ ஆகிய நான்கு கப்பல்களும், கியானா கடற்கரையில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டன.
- அப்போது, கப்பலில் ஏறுவது, கப்பல்களுக்கு இடையே பணியாளர்களை மாற்றுவது ஆகியவற்றோடு, பிரான்ஸ் கப்பல் வென்டோஸ் மற்றும் இந்திய கடற்படை கப்பல் சுமேதாவில் இருந்து புறப்பட்ட, ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பறக்கும் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் கினியா வளைகுடாவில் 31 நாட்கள் இந்த ரோந்துப் பணி நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் கினியா வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடலோர நாடுகள் மற்றும் யாவுண்டே கடல்பகுதி பாதுகாப்பை ஆதரிப்பதில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன.
- இந்தியா – இலங்கை இடையேயான 9-வது கூட்டு ராணுவப் பயிற்சி "மித்ரா சக்தி -2023" இன்று அவுந்த் (புனே) ல் தொடங்கியது. இந்தப் பயிற்சி 2023 நவம்பர் 16 முதல் 29 வரை நடத்தப்படுகிறது.
- 120 வீரர்களைக் கொண்ட இந்தியப் படைப்பிரிவில் முக்கியமாக மராத்தா தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இலங்கை தரப்பில் 53 தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- இந்திய விமானப்படையைச் சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 5 வீரர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
- பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கூட்டு எதிர்வினைகளை ஒருங்கிணைப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். தாக்குதல், தேடுதல் மற்றும் அழித்தல், போன்ற உத்தி சார்ந்த நடவடிக்கைகளை இரு தரப்பினரும் மேற்கொள்வார்கள்.
- கூடுதலாக, ராணுவ தற்காப்பு கலைகள், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் யோகா உடற்பயிற்சி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
- மித்ரா சக்தி - 2023 பயிற்சியில் ஹெலிகாப்டர்கள் தவிர ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகள் பயன்படுத்தப்படும்.
- ஹெலிபேட்களை பாதுகாப்பது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது காயமடைந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பான ஒத்திகைகளும் இரு தரப்பினராலும் கூட்டாக ஒத்திகை செய்யப்படும்.
- இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நவம்பர் 16, 2023 அன்று நடைபெற்ற 10-வது ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
- கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஆசியான் பிராந்தியத்தில் உரையாடல் மற்றும் ஒருமித்த கருத்தை ஊக்குவிப்பதில் அதன் பங்கைப் பாராட்டினார்.
- 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு இணங்க சர்வதேச நீர்வழித்தடத்தில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
- ஆசியான் பிராந்தியம் உட்பட சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் ஒரு கடுமையான அச்சுறுத்தல் என்பதை குறிப்பிட்ட இந்தியா, பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர் செயல்பாட்டுக் குழுவுக்கு இணைத் தலைமை தாங்க முன்மொழிந்தது.