Type Here to Get Search Results !

10th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


10th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

டிசம்பர் 15 முதல் பாரத் NCAP சோதனை
  • இந்தியாவில் உள்ள கார்களின் பாதுகாப்பு தரநிலையை நிர்ணயம் செய்வதற்காக பாரத் என்.சி.ஏ.பி சோதனையை அரசு அறிமுகம் செய்தது.
  • அந்த வகையில் டிசம்பர் 15 முதல் கார்களின் தரநிலை சோதனை தொடங்கும் என அமைச்சகம் அறிவித்துள்ளது. பாரத் என்சிஏபி கார் மதிப்பீட்டு திட்டம், அல்லது பாரத் என்.சி.ஏ.பி ஆகஸ்ட் 2023 இல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. 
  • இது உலகளாவிய Global NCAP சான்றிதழ் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அது இந்திய தேவைகளுக்கு இங்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் நோக்கம் தேசிய வாகனத் துறையின் பாதுகாப்பு தரங்களை உயர்த்துவதாகும்.
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை 2023
  • தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான பிரனீத் கவுர், சகநாட்டைச் சேர்ந்த ஜோதி சுரேகாவை எதிர்த்து விளையாடினார். 
  • இதில் ஒரு கட்டத்தில் பிரனீத் கவுர் 2 புள்ளிகள் பின்தங்கியிருந்தார். இதன் பின்னர் கடைசி 2 சுற்றில் மீண்டு வந்த அவர், போட்டியை 145-145 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார்.
  • இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரனீத் கவுர் 9-8 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம்வென்றார். 
  • சர்வதேச அளவில் பிரனீத் கவுர் வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாக அமைந்தது. 2-வது இடம் பிடித்த ஜோதி சுரேகாவெள்ளிப் பதக்கம் பெற்றார்.
  • காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அதிதி சுவாமி, பிரியன்ஷ் ஜோடி 156-151 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. 
  • மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பிரனீத் கவுர், அதிதி சுவாமி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 234-233 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.
  • ஆடவருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 147-146 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் ஜூ ஜாஹூனை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 
மகளிருக்கு உரிமைத் தொகை - 2ம் கட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தார்
  • தமிழகத்தில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  • 2 மாதங்கள் அளிக்கப்பட்ட நிலையில், 3-ஆவது மாதமாக நவம்பா் மாதமும் வழங்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக, நவ.10-ஆம் தேதிக்குள் பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே உள்ள பயனாளிகளுக்கு உரிமைத் தொகை அவரவா் வங்கிக் கணக்குகளில் சோ்க்கப்பட்டு வருகின்றன.
  • மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமாா் 11 லட்சம் போ் மேல்முறையீடு செய்திருந்தனா். அவா்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் போ் தகுதியானவா்களாகக் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நவம்பா் மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
  • அதன்படி, சென்னை கலைவாணா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2-ஆம் கட்டத்தை 7.35 லட்சம் பயனாளிகள் சிலருக்கு உரிமைத் தொகையை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
  • இதன் மூலம் மகளிா் உரிமைத் தொகை பெறுவோா் எண்ணிக்கை 1,13,84,300-ஆக உயா்ந்துள்ளது.
விரிவான "டிஜிட்டல் விளம்பரக் கொள்கை, 2023" க்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல்
  • மத்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகத் துறைக்கு டிஜிட்டல் மீடியா பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏதுவாக "டிஜிட்டல் விளம்பரக் கொள்கை, 2023"-க்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • டிஜிட்டல்மயமாக்கலுக்கு ஏற்ப மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து தகவல்களைப் பரப்புவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிபிசியின் பணியில் இந்தக் கொள்கை ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.
  • சமீபத்திய ஆண்டுகளில், பார்வையாளர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தும் விதம் டிஜிட்டல் இடத்தை நோக்கிய மாற்றத்தைக் கண்டுள்ளது. 
  • மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் இப்போது இணையம், சமூக மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களுடன் இணைக்கப்பட்டு மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி தொலைதொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1172 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
  • ஓடிடி மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் ஸ்பேஸில் ஏஜென்சிகள் மற்றும் அமைப்புகளை இணைக்க சிபிசிக்கு இந்த கொள்கை உதவும். சிபிசி இப்போது முதல் முறையாக அதன் பொது சேவை பிரச்சார செய்திகளை மொபைல் பயன்பாடுகள் மூலமும் வழிநடத்த முடியும். 
  • சமூக ஊடகத் தளங்கள் பொது உரையாடல்களின் பிரபலமான சேனல்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், இந்தத் தளங்களில் அரசு வாடிக்கையாளர்களுக்கு சிபிசி விளம்பரங்களை வைக்கும் செயல்முறையை இந்தக் கொள்கை மேலும் ஒழுங்குபடுத்துகிறது. 
  • பல்வேறு தளங்கள் மூலம் அதன் பரவலை மேம்படுத்த டிஜிட்டல் மீடியா ஏஜென்சிகளை ஒருங்கிணைக்க சிபிசிக்கு இந்தக் கொள்கை அதிகாரம் அளிக்கிறது.
  • இக்கொள்கை டிஜிட்டல் தளத்தின் மாறும் தன்மையை அங்கீகரித்து, முறையாக அமைக்கப்பட்ட குழுவின் ஒப்புதலுடன் டிஜிட்டல் இடத்தில் புதிய மற்றும் புதுமையான தகவல்தொடர்பு தளங்களை இணைக்க சிபிசிக்கு அதிகாரம் அளிக்கிறது. 
  • சிபிசியின் டிஜிட்டல் விளம்பரக் கொள்கை, 2023, கண்டுபிடிப்புக்கான போட்டி ஏலத்தை அறிமுகப்படுத்துகிறது, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது. 
  • இந்த செயல்முறையின் மூலம் கண்டறியப்படும் கட்டணங்கள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் அனைத்து தகுதியான நிறுவனங்களுக்கும் பொருந்தும்.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel