Type Here to Get Search Results !

TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது? காலியிடங்கள் எத்தனை? / TNPSC GROUP 4 NOTIFICATION 2023

TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது? காலியிடங்கள் எத்தனை? / TNPSC GROUP 4 NOTIFICATION 2023

2023ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் வெளியிடயிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை டிஎன்பிஎஸ்சி முன்னதாக வெளியிட்டது. இதில், பல இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், நவம்பர் 12-ஆம் நாள் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் ,அதற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் காலியிடங்கள்

தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் குரூப் 4 நிலை பணியாளர்கள் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றாலும் கூட, ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398, 2022ம் ஆண்டு அறிவிக்கையன் படி 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவான குரூப் 4 பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கடந்தாண்டை விட கூடுதலாக 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகள், ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால், தேர்வர்களுக்குள் கடும் போட்டி நிலவும் என்றும், இதனால் கட்-ஆப் மதிப்பெண் அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel