Type Here to Get Search Results !

வரி நிலுவை தொடர்பாக சமாதான் திட்டம் / SAMATHAN THITTAM

  • வரி நிலுவை தொடர்பாக சமாதான் திட்டம் / SAMATHAN THITTAM: வணிகர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக வரித் துறை இடையே உருவாகும் வணிக வரி நிலுவை, மேல்முறையீடு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசால் 'சமாதான்' திட்டம் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு அமல்படுத்தப்படுகிறது. 
  • கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரி நிலுவை தொடர்பாக சமாதான் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
  • இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர், ''தமிழக அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகைதொடர்பாக 2.12 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
  • இதில் சம்பந்தப்பட்ட வணிகர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை 1.43 லட்சம். நிலுவையாக உள்ள தொகை ரூ.25 ஆயிரம் கோடி. எனவே, பழைய நிலுவை தொகையை வசூலிப்பதில் சமாதான் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
  • தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு வரி நிலுவை தள்ளுபடி முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரி மதிப்பீட்டு ஆண்டில்ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராத தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
  • இவர்கள் தவிர, இதர வணிகர்கள், நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை என 4 வரம்புகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
  • நிலுவை தொகையை வணிகர்கள் கட்டுவதற்கு முன்வரும் நாள் வரை அவர்கள் கணக்கில் ஏற்றப்படக்கூடிய திரண்ட வட்டித் தொகையும் (Accrued Interest) முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
  • அதன்படி, சிறு வணிகர்களுக்கான சமாதான் திட்டம் நேற்று முதல் அமலுக்குவந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், சிறு வணிகர்களுக்கு வரி நிலுவை ரத்துக்கான சான்றிதழ்களை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் 4 மாதங்களுக்கு, அதாவது, 2024 பிப்.15 வரை நடைமுறையில் இருக்கும் இதில், நிலுவை தொகை தள்ளுபடியால் 1.40 லட்சம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 95,502 வணிகர்கள் பயனடைகின்றனர்.வரி நிலுவைக்காக பிணைக்கப்பட்டுள்ள 1,002 சொத்துகள் வணிகர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

  • SAMATHAN THITTAM: In order to solve the problems of business tax arrears and appeals arising between businessmen, business companies and the business tax department, the 'Samadan' scheme has been introduced by the Tamil Nadu government from time to time and implemented for a limited period. While GST was implemented in 2017, no settlement plan was announced regarding tax arrears in Tamil Nadu.
  • In this situation, Chief Minister Stalin issued an announcement under Article 110 on the 10th in the Legislative Assembly. Speaking at that time, the Chief Minister said, "There are 2.12 lakh cases pending regarding tax arrears to be paid by traders to the Tamil Government. 
  • The number of traders and companies involved in this is 1.43 lakh. The outstanding amount is Rs.25 thousand crores. Therefore, the government has decided to implement a reconciliation plan to collect old dues. The scheme has been designed with a new approach and additional benefits,” he said.
  • For the first time in the history of Tamil Nadu, tax arrears waiver has been announced for small traders. Accordingly, the outstanding amount is completely waived for the traders who have to pay tax, interest and penalty less than Rs.50 thousand in the tax assessment year.
  • Apart from these, other traders, companies have balance between Rs.50 thousand to Rs.10 lakh, Rs.10 lakh to Rs.1 crore, Rs.1 crore to Rs.10 crore and above Rs.10 crore under 4 thresholds. have been brought
  • The Chief Minister also announced that the accrued interest that can be loaded into the accounts of the merchants till the day they pay the dues will be completely waived off.
  • Accordingly, the peace plan for small traders came into force from yesterday. Chief Minister Stalin launched the scheme by giving tax arrears cancellation certificates to small businessmen at an event held at the Chief Secretariat, Chennai.
  • The scheme will be in effect for 4 months i.e. till 15th February 2024, in which 95,502 businessmen involved in 1.40 lakh cases will benefit from dues waiver. It is noteworthy that 1,002 properties attached for tax arrears will be handed back to the businessmen.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel