Type Here to Get Search Results !

18th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் மத்திய அரசுடன் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • செமிகண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டை ஈர்ப்பதுடன், உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செய்ற்கை நுண்ணறிவிலும் இந்தியா தனது பார்வையை செலுத்தியுள்ளது.
  • இந்த நிலையில், இந்தியாவின் செமிகண்டக்டர் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் ஒருபகுதியாக, செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் மத்திய அரசுடன் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையிலும், நாட்டில் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்தி வரும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
TNASDCH மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தமிழ்நாடு அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் சென்டர் ஃபார் ஹெல்த்கேர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் நடைபெற்ற விழாவில் ரவுண்ட் டேபிள் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டது.
  • இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் தலமையில், தமிழ்நாடு அபெக்ஸ் திறன் மேம்பாட்டு மையத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சு தாமஸ் ஆபிரகாம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ராஜ்குமார் டி.ஆர்.ஓ., ஆகியோர் கலந்துகொண்டனர்.
  • ரவுண்ட் டேபிள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஏரியா 2 இன் ஏரியா சேர்மன் திரு. சுஜய் சுதர்ஷன் மற்றும் அதுல்யா சீனியர் கேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் கார்த்திக் நாராயண் ஆகியோர் கலந்து கொண்டனர். 
  • இரு தரப்பினரின் கூட்டு முயற்சியில் திறன் மேம்பாடு துறையில் வேலைவாய்பு வழங்க வழிவகை செய்தனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரத் துறையில் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான உகந்த சூழலை வளர்ப்பதற்கான கூட்டு முயற்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 
  • இந்த கூட்டு முயற்சியின் விதிமுறைகளின் கீழ், TNASDCH மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகியவை ரவுண்ட் டேபிளின் மதிப்பிற்குரிய “FTE” பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஹெல்த்கேர் துறையில் விரிவான தொழில் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சிகளை வழங்குவதில் இணைந்து கொள்ள உறுதியளித்துள்ளன.
  • இந்த மூலமாக பயிற்சி முன்முயற்சியானது பங்கேற்பாளர்களுக்கு தேவையான திறன்கள் மற்றும் அறிவை அவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இரண்டு நிறுவனங்களும் இளைஞர்களுக்கு திறமையான பணியாளர்களை உருவாக்குவதிலும் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதில் உறுதியாக உள்ளன.
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையாக ரூ.1968.87 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2022-23 ஆம் நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையை தண்டவாளப் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சகப் பணியாளர்கள் மற்றும் பிற குழு 'சி' பிரிவு ஊழியர்களுக்கு (ஆர்.பி.எஃப்/ ஆர்.பி.எஸ்.எஃப் பணியாளர்கள் நீங்கலாக) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • ரயில்வே ஊழியர்களின் இந்தச் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் 11,07,346 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1968.87 கோடியை உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • 2022-2023-ம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. ரயில்வே 1509 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றது. சுமார் 6.5 பில்லியன் பயணிகளை அது ஏற்றிச் சென்றது. ரயில்வே ஊழியர்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் விதமாக உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை இருக்கும்.
லடாக்கில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு, மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு (ஐ.எஸ்.டி.எஸ்)- பசுமை எரிசக்தி வழித்தடம் (ஜி.இ.சி) கட்டம் -2க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • லடாக்கில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு, மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு (ஐ.எஸ்.டி.எஸ்)- பசுமை எரிசக்தி வழித்தடம் (ஜி.இ.சி) கட்டம் -2க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.
  • 2029-30ஆம் நிதியாண்டிற்குள் இத்திட்டத்தை மத்திய அரசின் நிதி உதவி 40 சதவீதம் அதாவது ரூ.8,309.48 கோடி என்பதுடன், மொத்தம் ரூ.20,773.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • லடாக் பிராந்தியத்தின் சிக்கலான நிலப்பரப்பு, பாதகமான பருவநிலை, பாதுகாப்பு நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய மின்தொகுப்புக் கழகம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முகமையாக இருக்கும். 
  • குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு- பசுமை எரிசக்தி வழித்தடம் கட்டம் -2 உடன், கூடுதலாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.12,031.33 கோடி மதிப்பீட்டில் 10,753 கி.மீ தூரத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் பாதைகள் மற்றும் 27546 எம்.வி.ஏ திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2024-25 சந்தைப் பருவத்தில், ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • 2024-25 சந்தைப் பருவத்தில், ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மைசூர் பயறு வகைக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.425 ஆகவும், ராப்சீட் மற்றும் கடுகுக்குக் குவிண்டாலுக்கு ரூ.200 ஆகவும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • கோதுமை மற்றும் குங்குமப்பூவுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.150 உயர்த்தப்படுகிறது. பார்லி மற்றும் கடலைக்கு முறையே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.115 மற்றும் ரூ.105 உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • 2024-25 சந்தைப்பருவத்திற்கான ரபி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி, குறைந்தபட்ச ஆதரவு விலையை அகில இந்திய அளவில் மதிப்பிடப்பட்ட சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொண்டுள்ளது. 
  • இதையடுத்து ராப்சீட் மற்றும் கடுகுக்கு 98 சதவீதம்; பருப்புக்கு 89 சதவீதம்; உளுந்துக்கு 60 சதவீதம்; பார்லிக்கு 60 சதவீதம்; குங்குமப்பூவுக்கு 52 சதவீதம் அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதுடன், பலவகையான பயிர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
டிசா மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
  • டிசா மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
  • அதன்படி ஒடிசா ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், திரிபுரா ஆளுநராக தெலங்கானாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இந்திரசேனா ரெட்டி நல்லு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபர் தாஸ் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். 2014 முதல் 2019 வரையில் ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தார். தற்போது இவர், பாஜகவில் தேசிய அளவில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
  • திரு. நல்லு தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக தலைவர் மற்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஆவார். தற்போது இவர் திரிபுரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel